கன்னிவாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. நீங்கள், பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் திருமணத் தடை நீங்கும். வருடம் பிறக்கும்போது குரு 8-ல் நிற்பதால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங் களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவீர்கள். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 12-ஆம் வீட்டில் தொடர்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரும். சொத்து விவகாரங்களில் ஏமாற்றம் வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.5.12 முதல் குரு 9-ல் அமர்வதால் எதிர்பாராத பண வரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. சேமிக்கத் துவங்குவீர்கள். ஆடி, புரட்டாசி மாதங்களில் சிறு சிறு. . .
COMMENT(S): 1
நன்றி