தனுசு சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர் நீங்கள். கேது வலுவாக 6-ஆம் வீட்டில் தொடர் வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குருவும், சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை, வீண் சந்தேகம் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும்போது அதிக வேகம் வேண்டாம். செவ்வாய் சாதகமாக இருப்பதால், பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 7-ல் நுழைவதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். 22, 23 ஆகிய தேதி களில் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானித்து செயல்படப் பாருங்கள். அரசியல்வாதிகள், கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலை யிடாமல். . .
COMMENT(S):