மதிப்புக்குரிய வாசகர்களே! வணக்கம். உங்கள் சக்தி விகடனுக்கு இப்போது ஒன்பது வயது. தரையில் நெஞ்சு பட நீந்தி, மண்டியிட்டுத் தவழ்ந்து, நடைவண்டி பிடித்துத் தளர் நடை பயின்று... என, உங்கள் சக்தி விகடனின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் ஆசையோடு பார்த்து ரசித்து ஊக்குவித்து வந்திருக்கும் ஆன்மிக உள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மேலும் சில மகிழ்ச்சியான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். தொலைபேசி, இ-மெயில், கடிதம் உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு முழுக்கத் தொடர்பு கொண்டு சக்தி விகடன் வாசகர்களுடன் கலந்து பேசியதில், அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தெரிவித்த கருத்து, 'சக்தி விகடன் இதழ் அனைத்து அம்சங்களையும் குறைவறக் கொண்டு, பூரணமாகத் திகழ்கிறது' என்பதுதான். அதேநேரம், மிகச் சில வாசகர்கள் அக்கறையோடு சொன்ன விமர்சனங்களையும் நாங்கள் சிரமேற்கொண்டோம். ''சக்தி விகடனில் கோயில்கள் பற்றிய தகவல்கள் மிகப் பயனுள்ளவை. வடிவமைப்பும் தெய்வீகப் படங்களும். . .
நான் சக்தி விகடனின் நீண்ட நாள் வாசகன். ஏன் இந்து சமயக்கருத்துக்கள் மட்டும் வெளியாகின்றன? இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ ஆன்மீகக் கருத்துக்களையும் வெளியிடலாமே? - பரக்கத், கோவை.
ஆன்மீகத்துக்குப் பாலம் [போட்டதே பாரதம் தான். அதில் தமிழ் நாட்டின் பங்கு தாராளம். அந்தப் பாலம் தளர்ந்துவிடாமல் திருப்பணி செய்வதுபோல இந்த முய்ற்சி அமையும் சந்தேகமில்லை.
COMMENT(S): 3

ஆலயம் தேடுவோம் பகுதியில் வரும் கோயில் திருப்பணிக்கு எங்கே பணம் அனுப்புவது என்பதை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.