'திருவிளக்கு பூஜை -கல்யாணம் நடக்கணும்!’ கொங்கு தேசமாம் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள கோவில்பாளையம் ஸ்ரீகாலகாலேஸ்வரர் கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை, கடந்த 10.4.12 அன்று நடைபெற்றது. சக்தி விகடனின் 83-வது விளக்கு பூஜை இது! ''சக்தி விகடன் வாசகியான நான், சக்தி விகடன் நடத்தி வரும் திருவிளக்கு பூஜைல கலந்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனா அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்பத்தான் கிடைச்சுச்சு. மனசே நிறைஞ்சிருச்சு'' என நெகிழ்ச்சியுடன் சொன்னார் பொள்ளாச்சி வாசகி கனகவல்லி. ''என் தங்கைக்கு நீண்டகாலமா கல்யாணம் தடைப்பட்டுக்கிட்டே இருக்கு. அந்தப் பிரார்த்தனை யோடதான் கலந்துக்கிட்டேன்'' என்று வாசகி மீனாவும் ''என் கணவருக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கணும்'' என்று பார்கவியும் பிரார்த்தனை செய்தனர். ''என் பொண்ணு, பிளஸ் டூ-வுல அதிக மார்க் எடுத்து அவ நினைச்ச படிப்பு படிக்கணும்'' என்று வாசகி முத்தரசி வேண்டிக் கொண்டாராம்!. . .
COMMENT(S):