அடடா அற்புதம்! எண்களில் மிக முக்கியமான, விசேஷமான எண் ஒன்பது. அந்த எண்ணில் 'நீண்ட வாழ்வு’ எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீன நாட்டு மக்கள். சீனாவின் சின்னமான டிராகன், ஒன்பது வடிவங்களைக் கொண்டது; ஒன்பது குழந்தைகளைக் கொண்டது! சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. நவக்கிரகம், நவரத்னம், நவ பாஷாணம், நவ துர்கா, நவச்சக்கரம், நவரசம், நவநாதர்கள் என ஒன்பது ஒன்பதாக உள்ளதை அறிவோம். சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு,. . .
எண் ஜோதிடத்தில் எண் ஒன்று முதல் எட்டு வரை உல்ல எண்களுக்கு தனித்தனி பலன்கள் உண கு, ஆனால் இந்த ஒன்பது இருக்கிறதே மற்ற எண்களின் துணையாய் நின்றி அவற்றின் சக்தியைக்கூட்டும்
COMMENT(S): 2
என்ன சார், உங்க 9-ம் ஆண்டு சிறப்பிதழ் இன்னும் முடியலயா....
எண் ஜோதிடத்தில் எண் ஒன்று முதல் எட்டு வரை உல்ல எண்களுக்கு தனித்தனி பலன்கள் உண கு, ஆனால் இந்த ஒன்பது இருக்கிறதே மற்ற எண்களின் துணையாய் நின்றி அவற்றின் சக்தியைக்கூட்டும்