தியானம் வசப்படும் வழி! ''எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால், மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது!'' - இப்படிப் புலம்புபவர்கள் இன்று நிறையப் பேர். ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். 'சுவாமி... எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும், என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலைபாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும்' என்றான். அவனுக்கு விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் என்பதைப் பார்க்கும்முன் ஒரு சின்னக் கதை... காட்டுப் பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையில், மூன்று ஞானிகள் நெடுநாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந்தனர். ஒருநாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்தார். 'சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன்' என்றார் அவர்.. . .
COMMENT(S):