பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!
பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்! கோயில் நகரம், ஸத்யவிரத க்ஷேத்திரம், அயோத்தி முதலான ஏழு மோட்சபுரிகளில் ஒன்று... இப்படி காஞ்சி மாநகருக்குப் பெருமைகள் நிறைய உண்டு. 'பெருமாள் கோயில்’ என வாஞ்சையுடன் வைணவப் பெரியோர்கள் போற்றும் திருவிடம் இது. ஆழ்வார்களால் பாடப்பட்டதால் திவ்யதேசமாகவும், ஆசார்யர்களின் அபிமானத்துக்கு உரியது ஆதலால் அபிமான ஸ்தலமாகவும், புராணங்கள் பலவும் போற்றுவதால் புராண க்ஷேத்திரமாகவும் திகழும் ஊர் இது. அது மட்டுமா? உலகம் அனைத்துக்கும் நாயகனாய், தேவர்களுக்குத் தலைவனாய், அடியார் மனக் குறிப்பறிந்து வரம் தருவதிலே வல்லவனாய் காட்சி தரும் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கொண்டிருப்பதும் இங்குதான். முன்னொரு காலத்தில் மூவுலகுக்கும் நாயகனான நாராயணனை தரிசிக்கும் பேராவலுடன், நைமிசாரண்யம் எனும் திருவிடத்தில் மாபெரும் வேள்வி நடத்தினார் நான்முகன். அப்போது எழுந்த அசரீரி, தென்னகத்தில் காஞ்சிக்கு சென்று வேள்வி இயற்றுமாறு பிரம்மதேவனுக்குக் கட்டளையிட்டது. பிரம்மனும் தேவ தச்சனைக் கொண்டு ஸத்யவிரத க்ஷேத் திரத்தை (காஞ்சிபுரத்தை) நன்கு. . .
COMMENT(S):