ஆனியில் அற்புத பௌர்ணமி! ஸ்ரீவியாச பகவான்- இந்த பூவுலகுக்குக் கிடைத்த மாபெரும் வரம், பொக்கிஷம், உபகாரம், ஆசீர்வாதம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு மகிமைகள் உண்டு இந்த வேத முனிவருக்கு. தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் அவசியமான வேதங்களைப் பிரித்து தொகுத்தளித்த புண்ணிய புருஷர் அவர். வேத சாரங்களை இன்னும் எளிதாக நமக்குப் புரியவைக்க 18 புராணங்களைப் படைத்தார்; மகாபாரதம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை அளித்தார். அதுமட்டுமா? வேதாந்த சித்தாந்த கண்ணாடியாக திகழும் பிரம்ம சூத்திரத்தை தந்தவரும் ஸ்ரீவியாசர்தான். இதற்கு த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத ஆச்சார்யர்கள் பாஷ்யம் (பொழிப்புரை) அருளியிருக்கிறார்கள். இவ்வளவு மகத்துவங்களுக்கும் சொந்தக்காரரான ஸ்ரீவியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே ஸ்ரீவியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும். அற்புதமான இந்த விரதத்தை நான்கு மாதங்கள் செய்யவேண்டும். ஆனாலும்... ஒரு பக்ஷத்தை ஒரு மாதமாகக் கணக்கில் கொண்டு, நான்கு பக்ஷங்களாக, அதாவது இரண்டு மாதங்கள் விரதம். . .
COMMENT(S):