முதல் வணக்கம் முதல்வனுக்கே! திருப்போரூர் மருப்பு நிலவால் என் மலதிமிரம் போக்கும் கருக்கோடை போக்கு மதக்காரால் - திருப்போரூர் நிம்பத்தின் கீழிருந்து நேயர்க்கு வாழ்வளிக்கும் கம்பக் கடமா களிறு - திருப்போரூர்ச் சந்நிதிமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகைதான். ஒருமுறை போரில் தேவர்களுக்குப் பின்னடைவு ஏற்பட, அவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் தேவர்களுக்கு உதவ முன்வந்தார்; அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். திருமாலிடம் இருந்து தப்பியோடிய அசுரன் ஒருவன், பிருகு முனிவரிடம் சரண் புகுந்தான். அவர் அவனுக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டார். பயந்து அங்குமிங்கும் ஓடிய அசுரன், நீராடிவிட்டு வந்துகொண்டு இருந்த பிருகு முனிவரின் மனைவி புலோமசையைக் கண்டான். அவளின் காலில் விழுந்து, தனக்கு அபயம் அளிக்கும்படி வேண்டினான். முதலில் மறுத்தவள், பிறகு அவனது மன்றாடலுக்கு மனமிரங்கி, அவனுக்கு சரணாகதி அளித்தாள். அந்த வேளையில், அசுரனைத் தேடி அங்கு வந்த திருமாலை தொழுது, அசுரன் தன்னிடம் சரண் புகுந்ததை விவரித்து, அவனை. . .
COMMENT(S):