கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன் 'உங்களுக்குக் குரு யாரு?' நண்பர் பரமசாமி, திடீரெனக் கேட்டதும் திகைத்துப் போனேன். 'எந்தக் குருவைக் கேட்கிறீர்கள்? கல்வியிலா? ஆன்மிகத்திலா? வாழ்க்கை வழிகாட்டலிலா?' என்று நான் அடுக்கிக்கொண்டே போக, 'போச்சுடா... உலகத்துல ஒரு ஆளுக்கு இத்தனை குரு இருப்பாங்களா? 'மாதா பிதா குரு’ங்றதுல ஒரு குருதானே வர்றாரு!' என்று ஆச்சரியமாய்க் கேட்டார் பரமு. 'நீங்க சொல்றது உண்மைதான். அந்தக் காலத்துல ஒரு குருநாதர்கிட்டேயே பல்வேறு செய்திகளைக் கத்துக்கிடுவாங்க. அவரும் எல்லாம் தெரிஞ்சவரா இருப்பாரு. ஆனா இன்னைக்கு அப்படியில்ல. கல்வி, இசை, ஓவியம், நாட்டியம், யோகா, ஆன்மிகம் இப்படி எல்லாத்துக்கும் தனித்தனியா குருமார்கள் வந்துட்டாங்க' என்று நான் சொல்ல, 'அதாவது கண் டாக்டர், பல் டாக்டர், சர்க்கரை நோய் டாக்டர்... இதுமாதிரி. அப்படித்தானே?' என்று பரமசாமி கேட்டார். 'விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணர் ஒருத்தர்தான் குரு. ஆனா ராமானுஜருக்கோ யாதவப் பிரகாசர், திருக்கச்சிநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரியநம்பி எனப் பல குருமார்கள். . .
பறவைகள் தேனீக்கள் இதர ஜந்துகள் இயற்கையிலேயே அவைகளின் வாழ்வு முறை தேக அமைப்பு இவற்றிற்கு ஏற்ப உள்ளுணர்வு கொண்டு சீராக செய்ல் படுகின்றன. அவை பயப்பட்டாலும் இறப்பைக் கண்டு கல்ங்காதவை. அவைகளின் நாட்டம் அல்ட்ரா மாடர்ன் உடுப்புகளிலோ பந்தா காட்டும் பார்ட்டிகளிலே கலோரி கணக்கிட்டு உண்பதிலோஇல்லை இயற்கை அதுதான் அவற்றின் வாழ்வாதாரம்...மனிதனோ உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எல்லாம் மாறி எண்பது கோடி எண்ணங்களில் ஆழ்ந்து அல்லல படுகிறான் அவன் தன் உள்ளூணர்வை கூர்ந்து கவனித்தால் அதுவே தக்க குருவினை அவனுக்கு காட்டி அதுவே கூட குருவாக மாறி வாழ்வாங்கு வாழ வழி காட்டும்.
COMMENT(S): 2