கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்அன்றைக்குப் பாடம் நடத்த நான் தயாரானபோது, 'ஐயா! இன்றைக்குப் பாடம் வேண்டாம். ஏதாவது கதை சொல்லுங்களேன்' என்றான் ஒரு மாணவன். 'பாடம் என்றால் ஏன் உங்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது?' என்று கேட்டுவிட்டு, ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் ஆர்வமாய்க் கேட்டார்கள். 'ஒரு வீட்டில் செல்லமாக பூனைக்குட்டி ஒன்று வளர்த்தார்கள். ஒருநாள் அந்த பூனைக்குட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு. வீட்டில் உள்ள எல்லோருமே அதற்கு மருந்து கொடுக்க முயற்சிக்க, 'என்னை இம்சை பண்ணாம விட்டுடுங்க...’ என்று கெஞ்சாத குறையாக, அவர்கள் கையில் இருந்த மருந்தைத் தட்டிவிட்டு வெளியே ஓடிவிட்டது பூனை. மருந்து முழுவதும் தரையில் கொட்டிவிட்டதே என்று எல்லோருக்கும் கவலை. சரி, தரையைத் துடைப்போம் என்று அந்த வீட்டு அம்மாள் போய் கைத்துணியைக் கொண்டு வருவதற்குள், பவ்வியமாக மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த பூனைக்குட்டி, கீழே கொட்டிக்கிடந்த மருந்தை மெதுவாக நக்கிக் குடிக்கத் தொடங்கியதாம். பூனைக்குட்டிக்கு மருந்து பிடிக்காமல். . .
COMMENT(S): 2
அருமை
இக்காலத் தலைமுறைக்குப் பிடிக்கும், கானா...மற்றும் குத்துப் பாட்டுக் களின் மெட்டுகளில் பாடங்களின் சாராம்சத்தைப் புகுத்தி இசையுடன் கற்பித்தால்(ரிமிக்ஸ் போல) மறக்கவே மாட்டார்கள் பாடங்களும் அவர்களுக்கு அல்வாவாக இனிக்கும் கலகலப்பான கதைகளுடன் கூடிய கட்டுரை அற்புதம்.