கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன் 'ழூணாவது நாளா போயிட்டு வர்றேன்; இன்னைக்கும் டிக்கெட் கெடைக்கலே' என்றவாறே, அருகில் வந்து அமர்ந்தார் வழக்கறிஞர் நண்பர் ஒருவர். 'ரிலீசான புதுப்படத்தை உடனே பார்க்காட்டிதான் என்ன?' என்று அருகில் இருந்த இன்னொரு நண்பர் கேட்க, 'அட... நீங்க வேற, 45 வருஷத்துக்கு முன்னால வந்த கர்ணன் படத்துக்குத்தாங்க போயிட்டு டிக்கெட் கெடைக்காம வர்றேன்' என்று அவர் ஆத்திரத்தோடு சொன்னபோது, நாங்கள் எல்லோரும் சிரித்துவிட்டோம். 'அப்படி என்ன சார் கர்ணன் கதையில இருக்கு?' என்றொருவர் ஆர்வமாய்க் கேட்டார். 'என்ன இருக்காவது..? கர்ணன் எத்தனை அபாக்கியவான் தெரியுமா? தாயார் குந்தி, கர்ணனைப் பெற்றெடுத்ததுமே ஆற்றிலே விட்டுவிட்டாள். தந்தையாகிய சூரிய பகவானும் கர்ணனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. குருவாகிய பரசுராமரோ கற்ற வித்தை தக்க நேரத்தில் கைகொடுக்காது என்று சாபம் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளே வந்து அவனுடைய தான தர்மங்களின் புண்ணியங்களைக் கையேந்தி பெற்றுக்கொண்டு அவனது மரணத்திற்குக் காரணமானார்...'. . .
புண்ணியங்களையே தானம் செய்து தத்தம் செய்து கொடுத்தது எவ்வளவு பெரிய புண்ணியம். காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்றார் பட்டினத்தார். ஆனால் தர்மம் தலை காப்பதுடன் தெய்வ திரு தரிசனமும் தந்து சொர்க்கத்தில் சேர்க்கும். தன்னலமற்ற தர்மம் மட்டும் தான் இங்கு குறிப்பிடுப்படுகிறது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பீள்ளையாருக்கு உடைக்கும் இக்கால தர்மம் அல்ல..
COMMENT(S): 2

இந்த பகுதி, வியாச பாரதத்தில் கிடையாது. வில்லிபுத்தூரார் பாரதத்தில் மட்டுமே காணப்படும் இந்த நிகழ்வு உண்மை இல்லை என்றாலும் சுவாரஸ்யமானது.