பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்! 'பொறையார் முருகன்கிட்ட வேண்டிக்கிட்டா, நம்ம குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் முருகப்பெருமான்’ எனச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கின்றனர், நாகை மாவட்ட மக்கள். நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் கந்தகுமாரன். பொறையார், தரங்கம்பாடி மட்டுமின்றி நாகை மாவட்ட மக்கள் பலரும், இதனை முருகன் கோயில் என்று சொல்வதில்லை; குமரக்கோயில் என்றுதான் சொல்கிறார்கள். புராதனம் மிக்க அழகிய ஆலயம் இது! மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளில், இங்கு ஏராளமான அன்பர்கள் வந்து வணங்கிச் செல்வார்கள் என்றாலும், வைகாசி விசாகமும் தைப்பூச விழாவும் வெகு விமரிசையாக நடந்தேறுகின்றன. ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் இங்கே! தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர். . .
COMMENT(S):