ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்! திருநெல்வேலியில் இருந்து உடன்குடி செல்லும் வழியில், நாசரேத் எனும் ஊருக்கு அருகில் உள்ள அந்தக் கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். என்ன... பெயரே கதை சொல்கிறதா?! வாஸ்தவம்தான்! நம் தமிழ்க்குடியின் சிறப்பை, நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பு மாண்பை விளக்கும் மிக அற்புதமான கதை அது! வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையை, வைகை வளப்படுத்த, தென்பாண்டி தேசமாம் நெல்லைச் சீமை, அகண்ட தாமிரபரணியால் செழிப்புற்று- சிறப்புற்று இருந்த காலகட்டம். அந்த நதியின் கரைப்பகுதிகள் மட்டுமல்ல, தாமிரபரணியின் இருமருங்கிலும் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் நிலத்தடி நீர் செழுமையாக இருந்தது. தரையில் சில அடிகள் தோண்டினாலே தண்ணீர் பெருக்கெடுக்கும்; இதன் காரணம் தொட்டு, 'தண்ணியூத்து’ எனும் பெயரிலேயே ஓரு பகுதி இங்கே உண்டு! இப்படி இயற்கை வளம் கொழிக்கும் அந்த கிராமத்தில், கன்னிப் பெண்கள் ஏழுபேர் ஊருணியில் நீராடச் சென்றார்கள். விட்டு விட்டுப் பெய்த. . .
COMMENT(S):