’இது வியாழக்கிழமை கோயில்’! காஞ்சி மாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் எனும் பகுதியில், திருக்காயாரோகணேஸ்வரம் எனும் தலம் உள்ளது. இந்தத் தலத்தின் ஸ்வாமி - ஸ்ரீகாயாரோகணேஸ்வரர். புராண- புராதனப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தில், குரு பகவான் சிறப்புடன் போற்றப்படுகிறார். காஞ்சியின் புண்ணிய நதியாம் வேத நதிக்கரையில் உள்ள அற்புதத் தலங்களில், இதுவும் ஒன்று. சைவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று புகழப்படும் அருமையான தொண்டை தேசத்தில், இந்தக் கோயிலை வியாழக்கிழமை கோயில் என்றுதான் அழைக்கின்றனர், பக்தர்கள்! காயாரோகணேஸ்வரம் என அழைக்கப்படும் தலங்கள் சிறப்பு வாய்ந்தவை என்கின்றன ஞான நூல்கள். தமிழகத்தில், காஞ்சியில் காஞ்சிக் காரோகணம்; கும்பகோணத்தில் குடந்தை காரோகணம்; நாகப்பட்டினத்தில் நாகைக் காரோகணம் என மூன்று தலங்கள் மட்டுமே உள்ளன. இந்தத் தலங்களில், காஞ்சியம்பதியில் உள்ள இந்தக் கோயிலில் மட்டுமே குரு பகவான் தனிச்சந்நிதியில் இருந்தபடி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார்! தவிர,. . .
COMMENT(S):