ஸ்ரீஉன்னிகிருஷ்ணனும் ஸ்ரீபகவதி அம்மையும்! கேரளாவின் மிக அழகிய நகரமான திருச்சூரில், மிகப் பழைமையான ஸ்ரீவடக்குநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின், சிற்பங்கள், ஓவியங்கள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துபவை. சொல்லப் போனால்... திருச்சூருக்குப் பிரபலத்தைத் தந்திருப்பதே இந்த ஆலயம்தான் என்கின்றனர், பக்தர்கள்! ஆலயத்தின் பூரம் திருவிழா வெகு பிரசித்தம். எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், அணிகலன்கள் என அணிந்து வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பஞ்ச வாத்தியங்களும் பாண்டி மேள முழக்கமும் முழங்க... லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ரசிக்கும் ஒப்பற்ற திருவிழா இது! பூரம் திருவிழா ஸ்ரீவடக்குநாதன் கோயிலில் நடந்தாலும் இதில் சுற்றுப்புற ஆலயங்களில் இருந்து ஊர்வலமாக ஸ்வாமிகளும் யானைகளும் வந்து பங்கேற்கின்றன. இவற்றில், முக்கியமான திருவம்பாடி ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் மற்றும் பரமேக்காவு ஸ்ரீபகவதி ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பார்கள்! ஸ்ரீவடக்குநாதன் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருவம்பாடி ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் திருக்கோயில். திருச்சூர் ரயில். . .
COMMENT(S):