தீபமேற்றி வழிபட்டால் திருமண வரம் கைகூடும்! அண்ணாநகர் ஸ்ரீநரசிம்மரை மனதாரத் தொழுதால், மனதில் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்கின்றனர் மதுரை மக்கள். சனிக்கிழமைகளில் இவரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர். ஆலவாய்ப்பகுதியில் வைகை ஆற்றின் வடகரையில், மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ளது ஸ்ரீசர்வேஸ்வரர் கோயில். சுமார் 50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோயில் என்றாலும், பழைமையும் பாரம்பரியமும் கொண்டு அழகுறத் திகழ்கிறது ஆலயம். இங்கே... அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி அம்பாள். சைவமும் வைணவமும் இணைந்த தலமாகத் திகழ்கிற இந்தக் கோயிலில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகக் கடவுள், ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதுர்கை வழிபாடு, பிரதோஷ காலங்களில் நந்தி தேவருக்கு சிறப்பு பூஜை, சங்கடஹர சதுர்த்தியில் ஸ்ரீவிநாயகருக்கு வழிபாடு, சஷ்டி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேக- ஆராதனை ஆகியன சிறப்புற நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும். . .
COMMENT(S):