தென்குமரி திருத்தலங்கள்! உலகின் எட்டுத் திக்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் தேடி வரும் திருத்தலம் கன்னியாகுமரி. முப்புறமும் கடல் சூழ, கன்னிப் பெண்ணாய் நித்தமும் அருள்மழை பொழியும் பகவதி அம்மன் தரிசனம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், தேசத் தந்தை மகாத்மாகாந்தி, பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபங்கள், கடலுக்குள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை... என, கன்னியாகுமரியில் ரசிக்க, தரிசிக்க நிறைய இடங்கள் உண்டு. கன்னியாகுமரியில் மட்டுமல்ல, அவ்வூரைச் சுற்றியும் தெய்வீகச்சாரல் பொழியும் திருத்தலங்கள் நிறைய உண்டு. கோடையைக் குளுமையாக்க சுற்றுலா செல்வோர், இந்த மாவட்டக் கோயில்களுக்கும் சென்று வந்தால் உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் இதமாக இருக்கும். நாகர்கோவில்: மாவட்டத்தின் தலைநகர். நகரின் மத்தியில் அமைந்த நாகராஜா ஸ்வாமியே, இந்நகரின் பெயருக்கும் காரணமானவர். இக் கோயிலின் நுழைவாயிலில் நேபாள நாட்டு புத்த விகாரக் கட்டடக்கலையின் தாக்கத்தைக் காண முடிகிறது. மூலவர் நாகராஜா இருக்கும் இடத்தின் மேல் பகுதி (விமானம்) எந்தக் கோவிலிலும். . .
COMMENT(S): 1
You have not included THIRUVATTARU IS it in Tamil Nadu or Kerala?