ஆலயம் தேடுவோம்! பேரும் புகழும் எவ்வளவு இருந்தால் என்ன... காசு- பணம் எத்தனை கொட்டிக் கிடந்தால் என்ன... கொஞ்சி விளையாட வாரிசு இல்லை என்கிற ஏக்கமும் துக்கமும் இருந்துவிட்டால், என்ன இருந்தும் இல்லாதது போலான வெறுமை வந்து வாட்டிவிடும், அல்லவா?! பிள்ளை இல்லாததில் வருந்திய சூரிய பகவான், சிவனாரைத் தொழுது 'எனக்கு நல்ல வழி காட்டுங்கள்’ என வேண்டினார். 'குழந்தைச் செல்வத் தைத் தந்தருளுங்கள், இறைவா!’ என்று சூரியனின் மனைவியர் உஷாவும் சாயாதேவியும் சிவ- பார்வதியை வணங்கி மன்றாடினர். ''தினமும் வில்வம் சார்த்தி என்னையும் உமையவளையும் வழிபட்டு வாருங்கள்'' என அருளினார் சிவபெருமான். அதன்படி அழகிய வனப்பகுதியில், தன்னுடைய தேவியரான உஷா தேவியுடனும் சாயா தேவியுடனும் தங்கி, கடும் தவம் புரிந்தார். அருகில் உள்ள இடத்தில் ஒரு குளத்தை உண்டு பண்ணினார். அதில் தினமும் நீராடிவிட்டு, சிவனாரையும் அம்பாளையும் வணங்கிவந்தார். இதில் மகிழ்ந்த சிவனார், உமையவளுடன் அவர்களுக்குத் திருக்காட்சி தந்தருளினார். சிவப்பரம்பொருளின். . .
COMMENT(S):