தம்பதியரின் மனக் கவலை போக்கும் கொடும்பு ஸ்ரீசுப்ரமணியர்!
தம்பதியரின் மனக் கவலை போக்கும் கொடும்பு ஸ்ரீசுப்ரமணியர்! கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு தென்கிழக்கில் ஐந்து கி.மீ. தூரத்தில் கொடும்பு எனும் இடத்தில் உள்ளது... ஸ்ரீசுப்ரமணியர் ஆலயம். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இந்த சுப்ரமணியரைப் பாடியிருக்கிறார். வள்ளி, தேவசேனா சமேதராக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த சுப்ரமணியரின் ஆலயக் கோபுரம், கோயிலுக்கு முன் உள்ள தேர்கள், தேர் மண்டபம் அனைத்தும் தமிழ்நாட்டு ஆலய அமைப்புகளைப் போலவே இருப்பதால், நாம் கேரளாவில் இருப்பதாகத் தோன்றவில்லை. தமிழகத்தில் இருந்து இடம் பெயர்ந்து, இங்கு வந்து வசித்த 32 செங்குந்த முதலியார் வகுப்பினர் நெசவு செய்து ஜீவனம் நடத்தி வந்தார்கள். தாங்கள் நெய்த துணிகளைத் தமிழ்நாட்டு அவினாசிப் பக்கம் போய் விற்று, அங்கிருந்து நூல் வாங்கி வருவது இவர்களது வழக்கம்! ஒருமுறை அப்படி மாட்டுவண்டி கட்டி அவர்கள் அவினாசிக்குப் பயணித்தபோது, வழியில் கோழி மாம்பட்டி எனும் ஊரின் அருகில் காட்டுப்பகுதியில், 'நானும் வர்றேன், நானும் வர்றேன்!’. . .
COMMENT(S):