நல்லது நடந்தது! 'குடிசைகளெல்லாம் வீடுகளாக, கட்டடங் களாக வளர்ச்சி பெற்று வருகிற காலம் இது. கோபுரமும் மதிலும், பிராகாரங்களும் சந்நிதிகளும், மண்டபங்களும் விமானங்களும், பரிவார தெய்வங்களும் படாடோப விழாக்களுமாக இருந்த ஒளிமதி - ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் மட்டும் குடிசைக்குள், இருளில் இருக்கலாமா?’ என்று 22.11.11 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒளிமதி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் திருக்கோயில். 'உலகுக்கே ஒளி தரும் சந்திரனின் சாபத்தை நீக்கி அருளுங்கள்’ என உமையவள், சிவனாரிடம் பரிந்துரைக்க... சந்திரனின் சாபத்தைப் போக்கி அருளினார் சிவனார். அதனால் இந்தத் தலம், ஒளிமதி எனப் பெயர் பெற்றது. 27 நட்சத்திரப் பெண்களின் கண்ணீரைத் துடைத்த ஈசனுக்கு, கம்பீரமான ஒரு கோயில் அமைவதற்கு, கல்லாக, மண்ணாக, சிமென்டாக, காசு -பணமாக, கல் விக்கிரகங்களாக, கதவுகளாக, சந்நிதிகளாக, 27 நட்சத்திரங்களைச் சேர்ந்த. . .
COMMENT(S): 1
இணையவசதி வந்தபிறகு பல விஷயங்களை எஙகளுக்கு
அறிந்துகொள்ள வாய்ப்பளித்த விகடனுக்கு நன்றி.
ரா.ராகவேந்திரன்