நல்லது நடந்தது! பராந்தக சோழன் கட்டிய கோயிலில், இன்றைக்கு பதினாறு கால் மண்டபமும் சந்நிதிகளுமே மிச்சமாக உள்ளன. இந்தக் கோயிலில் திருப்பணி நடக்காதா எனக் காத்திருக்கிறது தெங்கால் கிராமம் என 14.1.10 இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால். பொன்னை நதியும் பாலாறும் சங்கமிக்கும் இடத்தில், ஆற்றங்கரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது அழகிய சிவாலயம். இங்கே சிவனாரின் திருநாமம்- திருகண்டேஸ்வரர். திரு என்றால் ஸ்ரீமகாலட்சுமிக்கு தரிசனமாகக் கூட இருக்கலாம் என எழுதியிருந்தோம். கௌசிக ராஜா வழிபட்டதால் ஸ்ரீகௌசிகேஸ்வரர்; சப்த ரிஷிகள் தவமிருந்து வணங்கி யதால் ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் என்றெல்லாம் திருநாமம் உண்டாம் அவருக்கு! அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதிரிபுரசுந்தரி. இத்தகு புராணப் பெருமைகள் கொண்ட ஆலயம், வழிபாடுகளின்றி சிதிலப்பட்டுக் கிடக்கிறதே என வருத்தத்துடன் எழுதியிருந்தோம். மௌனகுரு சுவாமிகள், வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், தீர்த்தகிரி ஸ்ரீநாராயண. . .
COMMENT(S):