குழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி! 'எனக்குக் கல்யாணமாகி 10 வருஷமா குழந்தை இல்லை. தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் உடனுறை பொன்மலைநாதர் மகிமைகள் பற்றிக் கேள்விப்பட்டு, இங்கு வந்து வழிபட்டோம். என்ன ஆச்சரியம்... அடுத்த சில நாட்கள்ல என் மனைவி கர்ப்பம் தரித்தாள். ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்ட எங்களுக்கு இன்று முத்து முத்தாக மூன்று பிள்ளைகள். இங்கு வந்து வழிபட்டுக் குழந்தை வரம் கிடைத்த காரணத்தால், நாங்கள் இந்த ஊரிலேயே நிரந்தரமாகக் குடியேறிவிட்டோம்...' என நெகிழ்ச்சியோடு பேசுகிறார் சகாயம். திருவண்ணாமலை மாவட்டத்தில், சென்னை - போளூர் நெடுஞ்சாலையில், போளூருக்குக் கிழக்கே 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிகாபுரம். இந்த மாவட்டத்தில், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக உயரமான கோபுரம் கொண்ட கோயில் இதுதான். ஆரம்பக் காலத்தில் 'தேவக்காபுரம்’ என அழைக்கப் பட்ட இந்தத் தலம், காலப்போக்கில் 'தேவிகாபுரம்’ ஆகிவிட்டது. இங்குள்ள கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், அவர்களே இக்கோயிலைக். . .
COMMENT(S):