ஆடியில் மூன்று அம்மன் தரிசனம்! 'ஒழுகைமங்கலம் மாரியம்மன்கிட்ட வேண்டிக்கிட்டா... இனி நமக்கு ஒரு குறையும் வராம அவ பார்த்துக்குவா’ என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர் நாகை மாவட்ட மக்கள்! நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் காரைக்காலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஒழுகைமங்கலம். இங்கே குடிகொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஸ்ரீமாரியம்மன், சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம்! பசு பால் சொரிந்து, பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால், ஊருக்கு ஒழுகைமங்கலம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். பங்குனிப் பெருந்திருவிழா, சித்திரை வருடப் பிறப்பு, நவராத்திரி உத்ஸவம், தை மாதப் பிறப்பு ஆகியவை சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதம் வந்துவிட்டால், ஸ்ரீமாரியம்மனைக் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் வழிபடுவோர், இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். தவிர, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றி வேண்டிக். . .
COMMENT(S):