|  | | கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.
பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் 'தேசாந்திரி'யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அந்தப் பயண அனுபவத்தை ஒருங்கே பெறுவதற்கு, இதோ அழகிய புத்தக வடிவம்.
சென்றுவரும் இடங்களைப் பற்றி எழுதும் பலர், அதனை வெறும் பயணக் கட்டுரைகளாகவே எழுதுகின்றனர். ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன், அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடைந்தபோது நேரும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். |
|
|  | | குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன.
கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து இந்த நூலில் ஓர் அருமையான உறவுப் பாலம் அமைத்துள்ளார் நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்.
ஆனந்த விகடன் இதழில் ‘சிறிது வெளிச்சம்!’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்!
வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன |
|
|  | | 'இது சிறகுகளின் நேரம்!' என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜூனியர் விகடனில் முதலில் 90 இதழ்களுக்கு எழுதியபோது, உற்சாகத்தோடும் உள்ளம் கசிந்தும் மெய்சிலிர்த்தும் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்துகொண்டே இருந்தன. மிகமிகச் செறிவான, புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா எனும் மந்திரக்கோலால், ஆழ்ந்த தமிழறிவால் மிகமிக எளிமையாக்கி வாசகர்களுக்கு ருசிக்கக் கொடுத்தார் கவிக்கோ.
இடையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சிறிதுகாலம் தொடரை அவர் நிறுத்தியபோது, 'எப்போது மறுபடியும் கவிக்கோவின் தத்துவத் தமிழ் விருந்து?' என்று வாசகர்கள் எங்களைத் துளைத்தெடுத்து விட்டார்கள்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் 'இது சிறகுகளின் நேர'த்தை அவர் நகரவிட்டபோது, முன்னிலும் செறிவான கருத்துக்கள்... முன்னிலும் எளிமை... முன்னிலும் இனிமை!
பல சமயங்களில் அவர் அனுப்பும் அத்தியாயங்களைப் படிக்கும்போது எனக்கும் அவருக்கும் இடையே இனம்புரியாத ஒரு டெலிபதி அலையோடு கிறதோ என்றுகூட ஆச்சரியப்படுவேன்.
கடவுள் பற்றி, வாழ்க்கை பற்றி, ஆசைகள் _ நிராசைகள் பற்றி... ... |
|
| |
| 1  | Displaying 1 - 3 of 3 |
|
|
|
You have 0 item in your cart
|
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |