|  | | நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை!
அலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும், ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப்.
இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல்.
நோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது என்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர்
முகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து! |
|
|  | | இன்றைய நவநாகரிக நங்கையரில் பலர் ‘சமையல் என்றாலே சங்கடமான சங்கதி’ என்று வெகு தூரம் ஓடுகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதையே கலையார்வத்துடன் கற்றுக்கொண்டு, சமைத்து அனைவரையும் அசத்தவும் செய்கிறார்கள்.
வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வேலைபார்க்கும் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் சமைத்துச் சாப்பிடுவதே உடலுக்கு உகந்தது. பர்ஸையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நாமே சமைத்துவிடுவதுதான். கண்டதைப் போட்டு வெந்ததைத் திண்பதைவிட, முறையாகக் கற்று கச்சிதமாக சமைத்து உண்பதும் உபசரிப்பதும், மற்றவரையும் மகிழ்வித்து நாமும் மகிழ வழிவகுக்கும்.
சமையல் கலையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்களும், அற்புதமான சமையல் வகைகளை இந்த நூலின் உதவியோடு கற்றுக் கொள்ளலாம். எல்லா சமையல் நூல்களையும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சியாக, உணவின் தன்மையையும் அவற்றால் உடலுக்கு உண்டாகும் பயன்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகளையும் விரிவாக விளக்கி ஆரோக்கியத்துக்கு வழி காட்டியுள்ளார் நூலாசிரியர் சாந்தா ஜெயராஜ்.
நாவில் நீரூரவைக்கும் வண்ணமயமான புகைப்படங்களோடு, உணவு சமைக்கும் முறைகளையும், உணவு வகைகளை வகைப்ப |
|
|  | | இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு.
'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம்.
பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார் |
|
|  | | ஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்கள். 'என்ன சாப்பாடு செய்யலாம், என்ன குழம்பு வைக்கலாம்?' என்று சிந்தித்து, ருசியாகச் சமைத்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாற நேரம் இருந்தது. ஆனால், இப்போது பல இல்லத்தரசிகள் வேலைக்கும் சென்று அலுவலக வேலைகளையும் சுமக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பலவிதமான மக்களுடன் நெருங்கிப் பழகி வேலை செய்துவரும் சூழ்நிலையில், அவர்களது நடை, உடை, கலாசாரத்தைக் கற்றுக்கொண்டது போல, உணவு பழக்க வழக்கங்களிலும் அவர்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.
ஆக, நமது உணவுக் கலாசாரமும் மாறிவிட்டது.
சுருக்கமான செலவில் வீட்டிலுள்ள சமையல் பொருட்களைக் கொண்டே விதம் விதமான _ சுவையான சமையல் வகைகளைச் செய்து ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இந்த '30 நாள் 30 சமையல்' புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். இந்த சமையல் குறிப்புகள் அவள் விகடன் இதழுடன் இணைப்புகளாக வெளிவந்தபோதே வாசகிகளிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
கலந்த சாதம் முதற்கொண்டு, ஊறுகா |
|
|  | | 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பார்கள். இங்கே என்னவென்றால், ஒரு கவியரசரின் வாரிசு கைமணக்க சமைக்கிறது. ஆம்! கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம் சமையற்கலையில் நிபுணராக ஜொலிக்கிறார்.
கலாசாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருந்தது போல், சமையல் திறனிலும் தனித்துத் தெரிந்தார்கள் தமிழக மக்கள். திருநெல்வேலி சமையல், தஞ்சாவூர் சமையல் என்று ஊருக்கு ஊர் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற அறுசுவையிலும் கொஞ்சம் கூட்டிக் குறைத்து வித்தியாசப்படுத்திச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.
இதில் செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பு. அங்கே சைவம், அசைவம் இரண்டுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைப்பவை. இரண்டிலுமே கைதேர்ந்தவர் ரேவதி சண்முகம்.
'அவள் விகடன் வாசகிகளுக்காக, உங்கள் சமையல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்' என்று இவரிடம் கேட்டோம். வியப்பின் விளிம்புக்குப் போன ரேவதிக்கு இரட்டிப்பு சந்தோஷம்... இருக்காதா பின்னே! 'அவள் விகடன்' முதல் இதழிலிருந்து ஆர்வமாகப் படித்துவரும் வாசகியாம் அவர்!
எல்லோருக்கும் தெரிந்த, எல்லா இடங்களிலும் கிடைக்கிற அயிட்டங்களை வைத்துக்கொண்டு |
|
| |
1 2    | Displaying 1 - 5 of 6 |
|
|
|
You have 0 item in your cart
|
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |