Shirdi Sai Baba Stories in Tamil

ஷீர்டி ஸ்ரீசாய் பகவான் மண் செழிக்க விண்ணிலிருந்து வந்த மாமகான். தனக்கென வாழாது, பிறருக்கு அன்பையும் அருளையும் வாரி வழங்கியவர். சாய் என்றாலே "பிரத்யட்சமான கடவுள்" என்றே அவரது பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறார். கேட்டதை எல்லாம் அருளும் கருணை வள்ளல் சாய்பாபா, 1918-ம் ஆண்டு ஒரு விஜயதசமி நன்னாளில் தான் மகா சமாதி நிலையை அடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளன்று எல்லா சாய்பாபா ஆலயங்களிலும், பக்தர்களின் இல்லங்களிலும் இந்த நாள் சிறப்பு வழிபாடுகளோடு கடைபிடிக்கப்படுகிறது. இது சாய்பாபா சமாதி நிலையடைந்த 100வது ஆண்டு. அதையொட்டிய சிறப்புப் பக்கம் இது!