Latest News
Published on :30-11--0001 06:00 AM
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக ஒரு குழந்தையின் தந்தை பேஸ்கட்பால் மைதானம் கட்டித் தந்தார். இன்னொரு தந்தையோ கம்ப்யூட்டர் லேப் கட்டித் தந்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அப்புறம் என்ன, ஒரு குடிசையைப் போட்டு, 'இங்கே எல்.கே.ஜி. அட்மிஷன் வழங்கப்படும்’ என்று போர்டை மாட்டி வைத்தால் முடிந்தது. ஒருவர் கம்ப்யூட்டர் லேப், இன்னொருவர் கெமிஸ்ட்ரி லேப், மற்றொருவர் விளையாட்டு மைதானம், அப்புறம் டாய்லெட் தொடங்கி கேன்டீன் வரை ஒவ்வொரு அப்பாவாகக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்தால் 'அப்பப்பா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆரம்பித்து அமோகமாக நடத்தலாமே!

 

 

12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!

ஒவ்வொரு கட்சிக்கும் திருவிழாக்கள் உண்டு. தி.மு.க. என்றால் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மே தினம், பா.ஜ.க. என்றால் விநாயகர் சதுர்த்தி, அ.தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள்கள். இதில் தி.மு.க. என்றால் 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’ என்றோ 'ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்றோ நாகூர் அனீபா பாடிக்கொண்டிருப்பார். பா.ஜ.க. விழா என்றால் விநாயகர் பாட்டு. மே தினம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை அமைப்புகளின் பாட்டு அல்லது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை ஸ்பீக்கரில் கேட்கலாம். அ.தி.மு.க. விழாக்கள் என்றால் ஒன்லி எம்.ஜி.ஆர் பாட்டுகள்தான். அதில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ வகை பாடல்களைக்கூட ரசிக்கலாம். ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம் கொள்கைப் பாடல்களைப் போடும் பல சமயங்களில், அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்களோ... 'தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும், கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்’, 'கூந்தல் கருப்பு... ஆஹா... குங்குமம் சிவப்பு ...ஓஹோ!’

 

COMMENT(S): 12

நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் ... இவர்களைப் பற்றி மட்டுமே விளம்பி மகிழ்வன வியாபாரம் பணம் இவை மட்டும் குறியாக உள்ள அலைவரிசைகளும், தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளும் (விகடன் உட்பட) தான். தமிழ் நாட்டை சோம்பேறிகள் நிறைந்த நாடாக உருப்படாமல் அடித்ததில் இவைகளின் பங்கு மிக அதிகம். பாரதியார் இப்போது வாழ்ந்தால் ஏழை சொல் அம்பலம் ஏறாமல் புகழும் இன்றி குண்டரென சிறையில் வாடுவார்!

11-12-12 ஹலோ யெப்ம் கேக்கலயா..? They've done program about "பாரதியார்". Don't tell Blindly..!

விகடன் மட்டும் யோக்கியம்மா???பாரதியார் news onnumkooda illaiye?????

ஆனால்,11 12 12 பார‌தியார் பிறந்த‌ நாளில் நான் ப‌ணி புரிகின்ற‌ ஹ‌லோ ப‌ண்ப‌லையில் ... நாள் முழுவ‌தும் எல்லா நிக‌ழ்ச்சிக‌ளுமே பார‌தியார் ப‌ற்றியா நினைவுக‌ளோடும்,ப‌ல‌ த‌மிழ் அறிஞ‌ர்க‌ள்,க‌விஞ‌ர்க‌ளின் பேட்டிக‌ளோடும்..பார‌தியாரின் பாட‌ல்க‌ளோடும் யார் பார‌தி என்ற‌ த‌லைப்பில் ஒலிப‌ர‌ப்பாகிய‌து என்ப‌தை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்... ந‌ன்றி!
‍ஜெ.ம‌கேந்திர‌ன், நிக‌ழ்ச்சித்தொகுப்பாள‌ர்,

தப்பு உங்க பக்கமும் இருக்குதுல, என்னமோ யோக்கியம் மாறி பேசுறீங்க....?

ரஜினிக்கு ஒரு ஸ்பெஷல் சைட் திறந்ததே விகடன்... ரஜினி 63 எந்த கணக்கு பாரதியார பத்தி ஒரு 10 அட டைம்பாஸ் விகடன்ல கூட வரலயே...

விகடன் ல மட்டும் பாரதியார்க்கு பட்டு குன்ஞமா கட்டுனீங்க?
11- 12 பத்தி வாயவே தொரக்கலெ.

Displaying 1 - 7 of 7
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
டைம்பாஸ்
< 05 Jan, 2013 >

அட்டை படம்

சென்ற இதழ்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook