'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


கன்னி் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

பொது: புத்தாண்டு ஆரம்பத்தில் செவ்வாய் பலம் கூடியிருப்பது விசேடமாகும். குரு 4-ல் இருந்தாலும் சொந்த வீட்டில் இருப்பதால் அளவோடு நலம் புரிவார். சனி பலம் இல்லை. ஏழரைச் சனியின் காலமிது. ஏப்ரல் 30 முதல் கேது 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். ராகு 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் எதிலும் விசேடமான வளர்ச்சிக்கு இடமிராது. சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு இடம் தரலாகாது. கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகுவது நல்லது. ஆசை, அபிலாஷைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கேது பலம் இருப்பதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். அதனால் மனத்தெளிவும் பிறக்கும். டிசம்பர் 9 முதல் குரு 5-ஆமிடம் மாறுவதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறச் சந்தர்ப்பம் உருவாகும். பொதுவாக, தமிழ்ப் புத்தாண்டின் பின்பகுதி சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியம், குடும்பம்: சனி 12-ல் இருப்பதால் கால், நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கணவன் மனைவி உறவுநிலை சீராகவே இருந்துவரும். உடன் பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் மக்கள் நலம் சீர்பெறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் சாதாரணமாகவே காணப்படும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சனி 12-ல் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். சனிப் பிரீதி செய்வது நல்லது.

நிலபுலங்கள்: குரு சொந்த வீட்டில் 4-ல் இருப்பதாலும், 20-6-2008 வரை செவ்வாய் பலம் கூடியிருப்பதாலும் நிலபுலங்கள் சேரும். நிலபுலங்களால் ஆதாயமும் கிடைக்கும். 21-6-2008 முதல் 6-11-2008 வரை உள்ள காலகட்டத்தில் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். 7-11-2008 முதல் செவ்வாய் வலுப்பெறுவதால் பிரச்னைகள் தீரவும், புதிய சொத்துக்கள் வாங்கவும் வாய்ப்புக் கூடிவரும்.

தொழில்: இயந்திரப் பணிகள் லாபம் தரும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்து வரும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். டிசம்பர் 9 முதல் குரு 5-ஆமிடம் மாறுவதால் உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான பாதை புலப்படும். ஸ்பெகுலேஷன் துறைகளில் வளர்ச்சி காணலாம். அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் நற்பெயர் பெறுவார்கள். பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும்.

மாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். சனி பலம் இல்லாததாலும், ராகு 5-ல் இருப்பதாலும் மறதிக்கு ஆளாக நேரலாம். புத்தி மந்தம் ஏற்படும். டிசம்பர் 9 முதல் குரு 5-ஆமிடம் மாறியவுடன் நல்ல திருப்பம் உண்டாகும். அறிவாற்றல் கூடும்.

மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். எண்ணங்கள் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வேலைக்குச் செல்லும் மாதர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, இளநீலம், ரோஸ், சாம்பல் நிறம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 9.

தெய்வம்: மகாலட்சுமி, மகாவிஷ்ணு.

பரிகாரம்: சனி 12-ல் இருப்பதாலும் ராகு 5-ல் உலவுவதாலும் சனிக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும். சனிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.

 


 

Contact Us