'# தமிழ்நாட்டுக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் பேட்டி # தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை # எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வைகோ அறிவிப்பு # பணவீக்கம் 11.91 சதவீதத்திலிருந்து 11.89 சதவீதமாக குறைவு # சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது தவிர்க்க முடியாதது: பிரகாஷ்காரத் கருத்து # லஞ்சப் புகாரை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி 3 பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் #'


கும்பம்: குடும்பத்தில் குதூகலம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
பொது: குரு பலம் சிறப்பாக இருப்பதால் இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் உங்கள் மனத்திற்கினிய சம்பவங்கள் நிகழும். குடும்பத்தில் குதூகலம் கூடும். எண்ணங்கள் இனிது நிறைவேறும். உழைப்பு வீண்போகாது. முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். சுப காரியங்கள் நிகழும். வாழ்க்கை வசதிகள் கூடும். தெய்வ காரியங்கள் நிறைவேறும். எதிர்ப்புக்கள் விலகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். எடுத்த காரியங்களைத் திறம்பட ஆற்றுவீர்கள். கேது 6-ல் இருப்பதால் பிரச்னைகள் குறையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். 12-ல் ராகு உலவுவதால் இடமாற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. பொதுவில் இந்தப் புத்தாண்டின் முன்பகுதி சிறப்பானதாகும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். குடும்ப நலம் திருப்தி தரும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோரால் நலம் கூடும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழவேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.

பொருளாதார நிலை: டிசம்பர் 9 வரையிலும் குரு 11-ல் இருப்பதால் பொருளாதார சுபிட்சம் உண்டாகும். அதன் பிறகு குரு 12-ஆமிடம் மாறுவதால் பொருள்வரவு குறைந்து செலவுகள் கூடும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. ஸ்பெகுலேஷன் துறைகளைத் தவிர்ப்பது நல்லது.

நிலபுலங்கள்: சுக்கிரன் பலத்தால் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைத்து வரும். 12-ல் உள்ள ராகுவுக்குப் பிரீதி செய்வது நல்லது.

தொழில்: வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். ஜோதிடம், ஆன்மிகம், மாந்திரீகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு கூடும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். பண நடமாட்டமுள்ள இனங்களில் தொடர்பு கொண்டு தொழில் புரிபவர்களுக்குப் பிரச்னைகள் கூடும். போக்குவரத்துச் சாதனங்களில் தொழில் புரிபவர்களுக்குச் சோதனைகள் சூழும். ஏற்றுமதி- இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் நஷ்டப்பட நேரலாம்; விழிப்புத் தேவை.

மாணவர்களுக்கு: குரு பலத்தால் முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும்.

மாதர்களுக்கு: சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். சனிக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வெண்மை, நீலம், மெரூன்.

எண்கள்: 3, 5, 6, 7.

தெய்வம்: மகாலட்சுமி, மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர்.

பரிகாரம்: சனிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபடவும். உளுந்து தானம் கொடுப்பது நல்லது. டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குருப் பிரீதி செய்யவும்.

 


 

Contact Us