'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


 

மகரம்: துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
பொது: குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் இந்தப் புத்தாண்டு முழுவதும் சிறப்பாக இல்லாததாலும், ராகு, கேது ஆகியோரது நிலை திருப்திகரமாக இல்லாததாலும் விசேடமான நன்மைகளை இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் எதிர்பார்க்க இயலாது. அலைச்சலும் உழைப்பும் கூடவே செய்யும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். துன்பங்களும் துயரங்களும் கூடும். பொறாமைக் காரர்களின் சூழ்ச்சிக்கு ஆளாக நேரலாம். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஜனன கால ஜாதகம் வலுத்திருக்குமானால் சங்கடங்கள் குறையும். செவ்வாய் பலம் காரணமாக ஓரிரு நன்மைகள் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி காணலாம்.

ஆரோக்கியம், குடும்பம்: நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். வாயு உபத்திரவம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கவும் நேரலாம். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வேலையாட்களால் தொல்லைகள் கூடும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள்.

பொருளாதார நிலை: சாதாரணமாகவே காணப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபடுபவர்களுக்கு ஓரளவு பயன் கிடைத்து வரும்.

நிலபுலங்கள்: செவ்வாய் வலுத்திருப்பதாலும், 4-ஆம் இடத்தைக் குரு பார்ப்பதாலும் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்து வரும்.

தொழில்: கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்களது நிலை உயரும். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் முழு அக்கறை செலுத்தி, அயராது பாடுபட்டால்தான் ஓரளவாவது வளர்ச்சி காணமுடியும். புதிய தொழில் துறைகளில் ஈடுபட இந்த நேரம் சிறப்பானதாகாது.

மாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். படிப்பில் முழு அக்கறை தேவை.

மாதர்களுக்கு: 7-ல் கேது இருப்பது குறையாகும். இதனால் சங்கடங்கள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. விநாயகரை வழிபடவும். கணவரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் சோதனையான நேரமிது; விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, இளநீலம், சாம்பல் நிறம்.

எண்கள்: 5, 6.

தெய்வம்: மகாலட்சுமி, மகாவிஷ்ணு.

பரிகாரம்: ராகு, கேதுவுக்காக, சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. துர்க்கையையும், விநாயகரையும் வழிபடவும்.

 


 

Contact Us