'# தமிழ்நாட்டுக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் பேட்டி # தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை # எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வைகோ அறிவிப்பு # பணவீக்கம் 11.91 சதவீதத்திலிருந்து 11.89 சதவீதமாக குறைவு # சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது தவிர்க்க முடியாதது: பிரகாஷ்காரத் கருத்து # லஞ்சப் புகாரை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி 3 பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் #'


மிதுனம்: வெற்றி வாய்ப்புக்கள்
( மிருகசீரிஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
பொது: குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் விசேடமான நற்பலன்களைப் பெறுவீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்ப்புக்கள் விலகும். சுப காரியங்கள் நிகழும். வெற்றி வாய்ப்புக்கள் கூடும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். உழைப்பு வீண்போகாது. மன உற்சாகம் கூடும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் சிறக்கும். வாழ்வில் சுபிட்சம் கூடும். மனத்தில் தெளிவு பிறக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தருமப் பணிகளில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். 30-ஆம் தேதி முதல் ராகு 8-ஆமிடத்திற்கும் கேது 2-ஆமிடத்திற்கும் மாறுவது சிறப்பாகாது. இதனால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். பயணத்தால் சங்கடத்திற்கு ஆளாக நேரலாம். முன்பின் தெரியாதவர்களால் ஏமாற்றப்பட நேரலாம்; விழிப்புடன் இருப்பது நல்லது. விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிப்பு உண்டாகும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். கூட்டாளிகளாலும் சங்கடங்கள் உண்டாகும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரவேண்டாம். ஜாதக பலம் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. மொத்தத்தில் தமிழ்ப் புத்தாண்டின் முன்பகுதி சிறப்பாக இருக்கும் எனச் சொல்லலாம்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. டிசம்பர் 9 முதல் மறைமுக நோய்நொடி உபாதைகள் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் வேலையாட்களாலும் அனுகூலம் உண்டாகும். டிசம்பர் 9 முதல் மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் மன அமைதி குறையும்.

பொருளாதார நிலை: குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். டிசம்பர் 9 முதல் குரு 8-ஆமிடம் மாறுவதால் பண நடமாட்டம் குறையும். பொருளாதாரப் பிரச்னைகளும் ஏற்படும். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யவேண்டாம். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்து வரும். ஏப்ரல் 30 முதல் 8-ல் உள்ள ராகுவுக்குப் பிரீதி செய்வது நல்லது.

தொழில்: செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் சுபிட்சம் காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. டிசம்பர் 9 முதல் தொழில் ரீதியான பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும்.

மாணவர்களுக்கு: குரு பலத்தால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வெற்றி வாய்ப்புக்கள் கூடும். டிசம்பர் 9 முதல் குரு பலம் குறைவதால் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது.

மாதர்களுக்கு: முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். சுப காரியங்கள் நிகழும். வேலைக்குச் செல்லும் மாதர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள்.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், கரு நீலம், பொன் நிறம், பச்சை, சாம்பல் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8.

தெய்வம்: திருமால், மகாலட்சுமி.

பரிகாரம்: ராகுவுக்காகத் துர்க்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் தினமும் வழிபடுவது நல்லது.

 


 

Contact Us