'# திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் காடுவெட்டி குரு: பழிவாங்கும் நடவடிக்கை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் # நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு # 3வது அணியில் விரிசல்: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேற சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல் # அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார்: காங்கிரஸ் # மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அணுசக்தி ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும்: அத்வானி பேட்டி # ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் #'


மீனம் உழைப்பால் உயர்வு!
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது: ராசி நாதன் குரு 10-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதாலும் செவ்வாயைப் பார்ப்பதாலும், சனி பலம் கூடியிருப்பதாலும் இந்தப் புத்தாண்டில் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள். பிரச்னைகள் குறையவே செய்யும். உழைப்புக்குரிய பயன் கிடைத்து வரும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிர்ப்புக்கள் குறையும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 11-ஆமிடம் மாறுவதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். மன உற்சாகம் கூடும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். 11-ல் ராகு இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். வெளிநாட்டுத் தொடர்பு வலுப்பெறும். 5-ல் கேது இருப்பது குறையாகும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். மக்கள் நலம் பாதிக்கும். பொதுவில் இந்தப் புத்தாண்டின் பின்பகுதிக் காலம் சிறப்பானதாகும்.

ஆரோக்கியம், குடும்பம்: வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். பெண்களுக்குக் கர்ப்பக் கோளாறுகள் உண்டாகும். குடும்ப நலம் சீராகவே இருந்து வரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்கள் நலனில் கவனம் தேவை. பிற மொழி, மதக்காரர்கள் உதவுவார்கள்.

பொருளாதாரநிலை: பண வரவு சாதாரணமாகவே இருந்து வரும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 11-ஆமிடம் மாறி, ராகுவுடன் கூடுவதால் பணவரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.

நிலபுலங்கள்: டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். விவசாயிகளுக்கு லாபம் கூடும். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் ஆதாயம் கூடப் பெறுவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால் அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களில் வளர்ச்சி காணலாம். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றமான பாதை தெரியவரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வரவேற்பு கூடப் பெறுவார்கள். தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் விசேடமான நன்மைகளைப் பெறுவார்கள்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் கூடும். சுப காரியங்கள் நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, நீலம், .கறுப்பு.

எண்கள்: 3, 4, 6, 8.

தெய்வம்: முருகன், சிவன்.

பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடவும். கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. தினமும் காலையில் சிறிது நேரம் த்யானம் செய்வதன் மூலம் மன அமைதி காணலாம்.

 


 

Contact Us