பொது: குரு, சனி, செவ்வாய் ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான வளர்ச்சியைக் காண இயலாமல் போகும். அக்கம்பக்கத்தாரால் பிரச்னைகள் ஏற்படும். அலைச்சல் கூடும். அதிகம் உழைக்க வேண்டிவரும். சுப காரியங்கள் நிகழ ஜாதகபலம் கூடியிருப்பது அவசியமாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் ராகு 9-ஆமிடத்திற்கும் கேது 3-ஆமிடத்திற்கும் மாறுவது சிறப்பாகும். 9-12-2008 முதல் குரு 9-ஆமிடம் மாறுவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தத் தமிழ்ப்புத்தாண்டின் முன்பகுதியை விடப் பின்பகுதி சிறப்பானதாக அமையும் என்று சொல்லலாம். சுப காரியங்கள் நிகழவும் வாய்ப்புக் கூடிவரும். குருவும் ராகுவும் 9-ஆமிடத்தில் ஒன்று சேருவதால் வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும்.
ஆரோக்கியம், குடும்பம்: 4-ல் உள்ள சனியும் கேதுவும் 8-ல் உள்ள குருவும் உடல் நலக்குறைவை உண்டுபண்ணுவார்கள். குடும்ப நலமும் சீராக இராது. சண்டை, சச்சரவுகள் கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. தாய் நலனில் கவனம் தேவை. 9-12-2008 முதல் ஆரோக்கியம் சீர்பெறும். புனிதப் பணிகளில் பங்கு கொள்ள வாய்ப்புக் கூடிவரும். மக்களாலும் பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.
பொருளாதார நிலை: டிசம்பர் 9-ஆம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.
நிலபுலங்கள்: 4-ல் கேது இருப்பதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. ஏப்ரல் 30 முதல் கேது 3-ஆமிடம் மாறுவதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர வழிபிறக்கும். புதிய சொத்துக்களும் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்புக் கூடிவரும்.
தொழில்: கலைஞர்களுக்கு மாமூலான வளர்ச்சி பாதிக்காது. சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடுமையாக உழைப்பவர்கள் அதிகம் பயன் பெறுவார்கள். டிசம்பர் 9 முதல் உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வியாபாரிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். ஆன்மிகம், அறநிலையம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். நவீன விஞ்ஞானத்துறைகள் ஆக்கம் தரும்.
மாணவர்களுக்கு: ஏப்ரல் 30 முதல் தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். டிசம்பர் 9 முதல் குரு பலம் கூடுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெண்மை, நீலம்.
எண்கள்: 5, 6, 8.
தெய்வம்: மகாலட்சுமி, மகா விஷ்ணு.
பரிகாரம்: ‘‘வேயுறு தோளி பங்கன்‘‘ எனத் தொடங்கும் கோளறு திருப்பதிகப் பாடலைத் தினமும் காலை வேளையில் பாடுவது நல்லது. இதனால் கிரகதோஷம் விலகி, நன்மைகள் பெருகும்.
|