'# தமிழ்நாட்டுக்கு தினமும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் பேட்டி # தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை # எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வைகோ அறிவிப்பு # பணவீக்கம் 11.91 சதவீதத்திலிருந்து 11.89 சதவீதமாக குறைவு # சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது தவிர்க்க முடியாதது: பிரகாஷ்காரத் கருத்து # லஞ்சப் புகாரை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி 3 பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் #'


தனுசு: அரசாங்கத்தாரால் அனுகூலம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
பொது: செவ்வாய், குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் கோசாரப்படி அனுகூலமாக இல்லாததால் இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் விசேடமான நற்பலன்களைப் பெற வாய்ப்புக் குறைவு. அன்றாடப் பணிகள் சீராக நடந்து வரும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம்; விழிப்புத் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. குரு ஜன்ம ராசியில் இருந்தாலும் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் ஏற்படும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 2-ஆமிடம் மாறுவதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பொதுவில் இந்தத் தமிழ்ப்புத்தாண்டின் பின்பகுதி சிறப்பானதாக அமையும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராகவே இருந்து வரும். குடும்பத்தில் அமைதி காண்பது அரிது. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும், தந்தையாலும் அளவோடு நலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஓரளவு அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: பண வரவு சாதாரணமாகவே இருந்து வரும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. டிசம்பர் 9-ஆம் தேதி முதல் குரு 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும்.

நிலபுலங்கள்: 4-ஆம் வீட்டோன் குரு சொந்த வீட்டில் இருப்பதால் நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்து வரும். ஆகஸ்ட் 9 முதல் நவம்பர் 6 வரையிலும் உள்ள காலத்தில் புதிய சொத்துக்கள் சேரும்.
மார்ச் 7-ம் தேதிக்குப் பிறகும் செவ்வாய் பலம் காரணமாக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் ஈடேறும்.

தொழில்: கலைஞர்களது நிலை உயரும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஓரளவு நலம் உண்டாகும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். டிசம்பர் 9 முதல் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் கலந்து கொள்வீர்கள். வேலைக்குச் செல்லும் மாதர்கள் பதவிச் சிறப்புப் பெறுவார்கள்.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: செந்நிறம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 8, 9.

தெய்வம்: ருத்திரன்.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். ராகுவுக்காகத் துர்க்கையையும் கேதுவுக்காக விநாயகரையும் வழிபடுவது நல்லது.

 


 

Contact Us