'# திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் காடுவெட்டி குரு: பழிவாங்கும் நடவடிக்கை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் # நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு # 3வது அணியில் விரிசல்: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேற சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல் # அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார்: காங்கிரஸ் # மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அணுசக்தி ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும்: அத்வானி பேட்டி # ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் #'


விருச்சிகம் பணவரவு கூடும்!
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

பொது: குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் மனத்திற்கினிய சம்பவங்கள் நிகழும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேறச் சந்தர்ப்பம் கூடிவரும். முக்கியஸ்தர்கள், குடும்பப் பெரியவர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவி புரிவார்கள். உழைப்பு வீண்போகாது. ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். 9-ல் கேது இருப்பது சிறப்பாகாது. தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. டிசம்பர் 9 முதல் குரு 3-ஆமிடம் மாறுவதும் குறை ஆகும். மக்களால் பிரச்னைகள் ஏற்படும். குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உடல் நலனில் அக்கறை செலுத்தி வருவது நல்லது. பொதுவில் இந்தத் தமிழ்ப்புத்தாண்டின் முன்பகுதிக் காலம் மிகவும் சிறப்பாக அமையும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். 9-ல் கேது இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. சனி 10-ல் அமர்ந்து 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் நலம் கூடும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மக்கள் நலம் சீராக இராது.

பொருளாதார நிலை: குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். கடன் தொல்லை குறையும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். டிசம்பர் 9 முதல் எச்சரிக்கை தேவை.

நிலபுலங்கள்: சனி வலுத்திருப்பதால் நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். ஜூன் 21 முதல் செப்டம்பர் 24-க்குள் புதிய சொத்துக்களைப் பெறுவீர்கள். ஜனவரி 27 முதல் மார்ச் 6 வரையுள்ள கால கட்டமும் சிறப்பாகதாகும்.

தொழில்: உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் சிறக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகளுக்குத் திறமை வீண்போகாது. டிசம்பர் 9 முதல் செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காணலாம். டிசம்பர் 9 முதல் குரு பலம் குறைவதால் மறதிக்கு ஆளாக நேரலாம்.

மாதர்களுக்கு: மனத்திற்கினிய சம்பவங்கள் நிகழும். புத்தாடை, அணிமணிகள் சேரும். சுப காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பொன் நிறம், ஆரஞ்சு, தேன் நிறம், கறுப்பு.

எண்கள்: 1, 3, 4, 6, 8, 9.

தெய்வம்: தட்சிணாமூர்த்தி, பராசக்தி.

பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடுங்கள். வெற்றிகள் குவியும்.

 


 

Contact Us