'# எந்த விதமான மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன்: மதுரையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்: ஜெயலலிதா பேட்டி# தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் 3வது அணி அமைக்க தயாராக இருக்கிறோம்: ராமதாஸ் பேச்சு # மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி # மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சுக்கு வி.ஹெச்.பி. கண்டனம் # பாட்னா: கடத்தப்பட்ட 4 போலீசாரில் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக மாவோயிஸ்ட்கள் தகவல் # பாகிஸ்தான் சிறையில் இருந்து 100 இந்திய மீனவர்கள் விடுதலை # சூதாட்டம் எதிரொலி: பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் திடீர் நீக்கம் # '

சென்னை, செப்.28 : 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில், 2007-க்கான சிறந்த படமாக 'சிவாஜி' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரஜினிகாந்த், சிறந்த நடிகர் விருதைப் பெறுகிறார்.

2008-க்கான சிறந்த படமாக 'தசாவதாரம்' தேர்வு செய்யப்பட்டு, அதில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது.

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளின் திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு வழங்கிட, நீதியரசர் ஏ.கே. இராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விருதுகளுக்கான விவரங்களை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்  திரைப்பட விருதுகள்

1. சிறந்த படம் - முதல் பரிசு : சிவாஜி
2. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : மொழி
3. சிறந்த படம் - மூன்றாம் பரிசு : பள்ளிக்கூடம்
4. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : பெரியார்
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்திரிக்கும் படம் - சிறப்பு பரிசு : மிருகம்
6. அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு : தூவானம்

7. சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி)
8. சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)
9. சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : சத்யராஜ் (பெரியார்)
10. சிறந்த நடிகை - சிறப்பு பரிசு - பத்மப்பிரியா (மிருகம்)
11. சிறந்த வில்லன் நடிகர் : சுமன் (சிவாஜி)
12. சிறந்த நகைச்சுவை நடிகர் : விவேக் (சிவாஜி)
13. சிறந்த குணசித்திர நடிகர் : எம்.எஸ். பாஸ்கர் (மொழி)
14. சிறந்த குணசித்திர நடிகை : அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)

15. சிறந்த இயக்குநர் - தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்)
16. சிறந்த கதையாசிரியர் - எஸ்.எம். வசந்த் (சத்தம் போடாதே)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல் (கல்லூரி)
18. சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)
19. சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)
20. சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
21. சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (சிவாஜி)

22. சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே. அய்யப்பன் (பில்லா)
24. சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)
25. சிறந்த கலை இயக்குநர் - தோட்டா தரணி (சிவாஜி)
26. சிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)
27. சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தீபாவளி)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன் (பெரியார்)
29. சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன் (பில்லா)
30. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - கே.பி. சேகர் (மலரினும் மெல்லிய)
31. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - மகாலட்சுமி (மிருகம்)

2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

1. சிறந்த படம் - முதல் பரிசு : தசாவதாரம்
2. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : அபியும் நானும்
3. சிறந்த படம் - மூன்றாம் பரிசு : சந்தோஷ் சுப்பிரமணியம்
4. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : மெய்ப்பொருள்
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்திரிக்கும் படம் - சிறப்பு பரிசு : பூ
6. அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு : வல்லமை தாராயோ
7. அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - இரண்டாம் பரிசு : வண்ணத்துப் பூச்சி

8. சிறந்த நடிகர் : கமல்ஹாசன் (தசாவதாரம்)
9. சிறந்த நடிகை : சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)
10. சிறந்த நடிகர் - சிறப்பு பரிசு : சூர்யா (வாரணம் ஆயிரம்)
11. சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : த்ரிஷா (அபியும் நானும்)
12 சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)
13. சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)
14. சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)
15. சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ் ராஜ் (பல படங்கள்)
16. சிறந்த குணசித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)

17. சிறந்த இயக்குநர் - ராதா மோகன் (அபியும் நானும் )
18. சிறந்த கதையாசிரியர் - தமிழ்ச்செல்வன் ( பூ)
19. சிறந்த உரையாடல் ஆசிரியர் : கலைஞர் மு. கருணாநிதி (உளியின் ஓசை)
20. சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (அஜந்தா)
21. சிறந்த பாடலாசிரியர் : வாலி (தசாவதாரம்)
22. சிறந்த பின்னணி பாடகர் : பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்)
23. சிறந்த பின்னணி பாடகி : மஹதி (நெஞ்சத்தைக் கிள்ளாதேள்ளாதே)

24. சிறந்த ஒளிப்பதிவாளர் : ஆர்தர் ஏ. வில்சன் (நான் கடவுள்)
25. சிறந்த ஒலிப்பதிவாளர் : ரவி (வாரணம் ஆயிரம்)
26. சிறந்த எடிட்டர் : ப்ரவீன் - ஸ்ரீகாந்த் (சரோஜா)
27. சிறந்த கலை இயக்குநர் : ராஜீவன் (வாரணம் ஆயிரம்)
28. சிறந்த சண்டை பயிற்சியாளர் : கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)
29. சிறந்த நடன ஆசிரியர் : சிவசங்கர் (உளியின் ஓசை)
30. சிறந்த ஒப்பனைக் கலைஞர் : மைக்கேல் வெஸ்ட்மோர் - கோதண்டபாணி (தசாவதாரம் )
31. சிறந்த தையல் கலைஞர் : ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம் )
32. சிறந்த குழந்தை நட்சத்திரம் : ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப் பூச்சி)
33. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - எம்.ஏ. பிரகாஷ்
34. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - சவீதா (பல படங்கள்)

2006-2007ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

1. சிறந்த இயக்குநர் : ச. அன்பு (அரிதாரம்)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் : பா. தி தினேஷ் கிருஷ்ணன் (திற)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் : எம். ராம்குமார் (தாய்)
4. சிறந்த எடிட்டர் : பி. சசிகுமார் (தாய்)
5. சிறந்த படம் பதனிடுபவர் : ரா. முருகன் (அகத்திணை)

2007- 2008ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

1. சிறந்த இயக்குநர் : மு. கண்ணன் (அச்சுப்பிழை)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் : ஆனந்தகுமார் (பழைய படம்)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் : லட்சுமி நாராயணன் (கனா)
4. சிறந்த எடிட்டர் : பி. மர்பி (கனவு மெய்ப்பட)
5. சிறந்த படம் பதனிடுபவர் : வெங்கடேஷ் பிரசாத் (கனா)

 
                            
  <<<Back    ^Top
  Go to home page         Email article   Print Version  
 
Top News