மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

''விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?''

எம்.கார்த்திகேயன், வேலூர்.

இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனத்தின் (FIEO) தென்மண்டல இயக்குநர், உன்னிகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.    

''மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், நம்மில் பலர் ஏற்றுமதிக்குத் தகுதியான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் கவனக்குறைவாகச் செயல்பட்டு வருகிறோம். இதனால் இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் மீது வெளிநாட்டவர்கள் வைத்துள்ள மதிப்பு குறைகிறது. உதாரணத்துக்கு, இந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்களுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளைவிக்கிறோமா என்றால், இல்லை. இன்றைக்கு பல விவசாயிகள் செய்யும் தவறு, ரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிப்பதுதான். தவிர, அதை பேக்கிங் செய்யும்போது ஏற்படும் சேதத்தினால் லாபத்தை இழக்கின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க எங்கள் அமைப்பு மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

அடுத்து, முதன்முதலாக ஏற்றுமதித் தொழிலில் இறங்குபவர்கள், இந்தியாவுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து, அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்டபின் பெரிய ஆர்டராக எடுத்தால், இந்தத் தொழிலில் நீண்டகாலத்துக்கு நிலைக்க முடியும். ஏற்றுமதியை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் அதற்கான உரிமம் பெறுவது பற்றி யோசிக்க வேண்டாம்.

முதலில், ஐ.இ.சி எண்ணை (Import - Export Code (IEC) Number) வாங்க வேண்டும். இதற்கு http://zjdgft.tn.nic.inஎன்கிற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தான்.

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

இறக்குமதி ஏற்றுமதிக்கான எண்ணைப் பெற்ற பிறகே, ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய தேர்வு செய்திருக்கும் பொருட்கள் அடிப்படையில் அந்தந்த புரமோஷனல் கவுன்சிலிடம் உரிமம் பெற வேண்டும். பல பொருட்களை ஏற்றுமதிக்காகத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், எஃப்.ஐ.இ.ஓவிடம் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய நிலையில், நம்பிக்கையான இறக்குமதியாளர்களின் பட்டியலை எங்கு சென்றும் பெற முடியாது.  காரணம், பெரும்பாலான இறக்குமதியாளர்கள் அவர்களாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி அதை பெற்றுக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் விவரங்கள், அவர்களின் தொடர்புகளை இன்று பல வலைதளங்கள் வழங்கி வருகின்றன. இருப்பினும் இதிலுள்ள தகவல்களை முழுமையாக நம்பாமல், தீர விசாரித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

www.fieo.org என்கிற எங்களின் இணைய தளத்திலும் நாடுகள் வாரியாக, பொருட்கள் வாரியாக இறக்குமதியாளர்களின் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம்.'

தொடர்புக்கு, இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம் (FIEO), எண்: 706, 7-வது மாடி, ஸ்பென்ஸர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை - 600002.

தொலைபேசி: 044-28497744/ 55/ 66.

''என்னிடம் 10 நாட்டு எருமைகள் உள்ளன. இவற்றுக்கு முர்ரா எருமை மாட்டின் சினை ஊசியைப் போடலாமா?''

சி.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை.

திருப்பூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.செல்வராஜ் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

''நாட்டு எருமைகளுக்குத் தாராளமாக, முர்ரா இனத்தின் சினை ஊசியைப் போடலாம். முர்ரா நாட்டு இன எருமைகள், டெல்லி, ஹரியானா... போன்ற வடமாநிலங்களில் அதிகமாக உள்ளன. இந்த எருமைகள் நல்ல பால் உற்பத்தித் திறன் கொண்டவை. அதாவது, ஒரு பருவத்தில் 1,456 லிட்டர் முதல் 2,427 லிட்டர் வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. இதனால், இந்த இன மாடுகளின் சினை ஊசியை, தமிழ்நாட்டில் உள்ள நாட்டு எருமைகளுடன் கருவூட்டல் செய்வதால், நல்ல பால் உற்பத்தி கிடைத்து வருகிறது. முர்ரா சினை ஊசிகள், கால்நடைப் பராமரிப்புத்துறையின் மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. உங்கள் எருமை, பருவத்துக்கு வந்தவுடன், 'முர்ரா இன சினை ஊசியைப்  போடுங்கள்’ என்று, கால்நடை மருத்துவரிடம் சொன்னால் போதும். காரணம், தமிழ்நாட்டில் உள்ள எருமைகளுக்கு பெரும்பாலும் முர்ரா சினை ஊசிதான் போடப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைப் பண்ணையில் முர்ரா எருமைகள் வளர்க்கப்பட்டு, அவற்றின் விந்தணுக்கள், மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பட்டன.  பசு மாட்டை ஒப்பிடும்போது, எருமைப் பாலின் கொழுப்புச்சத்து அதிகம். பசும்பாலில் கொழுப்புச்சத்து 4.5% தான் இருக்கும். ஆனால், எருமைப்பாலில் 7% வரை கொழுப்புச்சத்து இருக்கும். எனவேதான், டீ கடைகளில் பெரும்பாலும் எருமைப்பாலைத்தான் பயன்படுத்துகிறார்கள். எருமைப்பால் மூலம் தயாரிக்கப்படும், டீ, காபிக்கு தனிச்சுவை உண்டு. எருமைப்பாலுக்குத்தான் அதிக விலையும் கிடைக்கிறது.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம், திருப்பூர் - 641604.

தொலைபேசி எண்: 0421-2248524.

''பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய மானியம் உள்ளது என்கிறார்கள். இதை எப்படிப் பெறுவது?''

எஸ்.ஆர்.சுகந்தி, காங்கேயம்.

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா.இளங்கோவன் பதில் சொல்கிறார்.

''தமிழ்நாட்டில் சின்னவெங்காயத்தை ஒப்பிடும்போது, பெரிய வெங்காயத்தின் உற்பத்தி குறைவு. இதற்கு முக்கிய காரணம், சின்னவெங்காயம் 90 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஆனால், பெரியவெங்காயம் 6 மாத காலம் எடுத்துக் கொள்ளும். பெரியவெங்காயம் நீண்ட காலப்பயிராக இருப்பதால், இதைச் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவதில்லை.  இதைத் தவிர்க்கவும், பெரிய வெங்காயத்தின் உற்பத்தியைப் பெருக்கவும், ஒரு ஹெக்டருக்கு ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் தொகையாக இல்லாமல், பெரியவெங்காய விதைகளாகத்தான் கொடுக்கப்படுகிறது.

நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?

பெரியவெங்காயத்தைத் தனிப்பயிராக மட்டுமல்ல, ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். மரவள்ளி, நிலக்கடலை, சேனைக்கிழங்கு போன்ற பயிர்களுடன் பெரியவெங்காயத்தை சாகுபடி செய்யும்போது, இந்தப் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதலும் குறைவாக இருக்கும். இந்த மானியத்திட்டம், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் வழிகாட்டுவார்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 9842007125.

-புறா பாண்டி

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி’ சும்மா 'பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும்

pasumai@vikatan.comஎன்ற முகவரிக்கு இமெயில் மூலமும் அனுப்பலாம்..