நாட்டு நடப்பு
Published:Updated:

தேன்கனிக்கோட்டையில் காவிரிப் போர்!

தேன்கனிக்கோட்டையில் காவிரிப் போர்!

மிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை, மார்ச் 7 அன்று போர்க்களம் போல் காட்சி அளித்தது. காவிரியின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியில் இறங்கியுள்ள கர்நாடக அரசையும், இதற்குத் துணை போகும் மத்திய அரசையும் கண்டித்து, ஆவேச முழக்கமிட்டவாறு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பல்வேறு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆக்ரோஷமாக அங்கே குவிந்தததுதான் காரணம்!

தேன்கனிக்கோட்டையில் காவிரிப் போர்!
தேன்கனிக்கோட்டையில் காவிரிப் போர்!

‘‘கர்நாடகா அரசு அணைகட்டத் திட்டமிட்டிருக்கும் மேக்கேதாத் பகுதியை மார்ச் 7 அன்று முற்றுகையிடுவோம்’’ என ஏற்கெனவே அறிவித்திருந்தது காவிரி உரிமை மீட்புக்குழு. இதன்படி 7-ம் தேதி அதிகாலையில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் தேன்கனிக்கோட்டையில் குவிந்தார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கர்நாடகாவுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். நேரம் ஆகஆக... கூட்டத்தினரின் ஆவேசம் அதிகரித்துக் கொண்டே போனது. குவிக்கப்பட்டிருந்த போலீஸ், அதிரடிப்படையினர் மற்றும் தடுப்பு அரண்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மேக்கேதாத் நோக்கி சீறிப்பாய முற்பட்டனர் விவசாயிகள். அவர்களையெல்லாம் படாதபாடுபட்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.

தேன்கனிக்கோட்டையில் காவிரிப் போர்!

‘‘தமிழகத்தின் வாழ்வாதாரம் காவிரி. புதிய அணைகட்டும் முயற்சியை கர்நாடகம் கைவிடவில்லையென்றால், அடுத்தகட்டப் போராட்டங்கள் இன்னும் வீரியமாக நடைபெறும்’’ என்று எச்சரிக்கை கொடுத்தார், காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்.

 கு.ராமகிருஷ்ணன்