நாட்டு நடப்பு
Published:Updated:

தண்டோரா

தண்டோரா

நெல் சாகுபடி!

தண்டோரா

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ‘அதிநவீன பழப் பயிர்கள் உற்பத்தி’, 7-ம் தேதி ‘இயற்கை முறையில் நெல் சாகுபடி’, 15-ம் தேதி ‘விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’, 20-லிருந்து 24-ம் தேதி வரை ‘பள்ளி மாணவர்களுக்கான கைவினைத்திறன் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் மையம், (எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்- 603203

தொலைபேசி: 044-27452371

கறவை மாடு பராமரிப்பு!

பெரம்பலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 26-ம் தேதி ‘கறவை மாடுகளில் கரு தங்காமை மற்றும் கலப்பினப் பசுக்கள் பராமரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரம்பலூர்.

தொலைபேசி: 04328-224599

கட்டணப் பயிற்சி

கீரை/காய்கறி சாகுபடி

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, தமயந்தி அம்மாள் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 11-ம் தேதி இயற்கை விவசாய முறையில் கீரை/காய்கறி சாகுபடி சிறப்பு கருத்தரங்கமும், பாரம்பர்ய காய்கறி விதைகள் கண்காட்சியும் நடைபெற உள்ளன. அனுமதிக் கட்டணம் 50 ரூபாய். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், விழுப்புரம்

தொடர்புக்கு, செல்போன்: 78118-97510, 93453-10557

நீர் கருத்தரங்கு!

காஞ்சிபுரம், பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் ‘தமிழக நீர் வளங்களைக் காப்பது’, ‘தொண்டை மண்டல விவசாய வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ உள்ளிட்ட தலைப்புகளை முன்வைத்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மூத்தப் பொறியாளர் வீரப்பன், ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘எழில்சோலை’ மாசிலாமணி, காஞ்சி அமுதன் உள்ளிட்ட பேச்சாளர்கள் கருத்துரை வழங்க இருக்கிறார்கள்.

நாள்: ஏப்ரல் 4-ம் தேதி சனிக்கிழமை, காலை 10 மணிக்கு

இடம்:  நாராயணகுரு பூசை மண்டபம், காஞ்சிபுரம்

தொடர்புக்கு, செல்போன்: 94452-69610

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்