Published:Updated:

தண்டோரா

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி!

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட்-25ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ 26-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

மாடித்தோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம், ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி ‘மாடித்தோட்ட அமைப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்’,22-ம் தேதி சுயவேலை வாய்ப்பளிக்கும் கறவை மாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘நெல்லிக்காய் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள்’, 27-ம் தேதி ‘இயற்கை வேளாண்மைக்கு உதவிடும் இடுபொருள் உற்பத்தித் தொழில்வாய்ப்புகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

செல்போன்: 99429-78688

தொலைபேசி: 0461-2269306

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 18-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு பயிற்சி’, 19-ம் தேதி’, ‘காளான் வளர்ப்பு பயிற்சி’, 21-ம் தேதி, ‘இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள்’ 27-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 04285-241626.

இயற்கைக் கலந்துரையாடல்!

ஈரோடு மாவட்டம், நசியனூர் சாலையில் உள்ள, ஈரோடு மஞ்சள் வணிக வளாகத்தில், ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழ்நாடு இயற்கை வழி விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக ‘தமிழகத்தின் இயற்கை விவசாய எதிர்காலம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. மேற்கு மாவட்ட இயற்கை விவசாயிகளுக்கு முன்னுரிமை. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

செல்போன்: 94880-20646, 94436-63562

கால்நடைகளில் நோய் பராமரிப்பு..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 25-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘கால்நடைகளில் நோய் பராமரிப்பு’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 0452-2483903.

கால்நடைப் பண்ணை...!

சேலம் மாவட்டம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 18-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ 25-ம் தேதி, ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம்’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 0427-2410408

கட்டண பயிற்சி

கீரை-காய்கறி சாகுபடி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகிலுள்ள ராயர்பாளையம்புதூர் அருள்மிகு விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பாக, ‘இயற்கை விவசாய முறையில் கீரை - காய்கறி சாகுபடி’ என்னும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அனுமதிக்கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு,

செல்போன்: 78118-97510, 97903-27890

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.