தண்டோரா
இலவசப் பயிற்சிகள்
'தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
ஆசிரியர்
நாட்டுக் கோழி!
திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி 'நாட்டுக் கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு முக்கியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04512460141

இயற்கை வேளாண்மை!
தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம், ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில், ஆகஸ்ட் 26ம் தேதி 'நெல்லிக்காய் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள்’, 27ம் தேதி 'இயற்கை வேளாண்மைக்கு உதவிடும் இடுபொருள் உற்பத்தித் தொழில்வாய்ப்புகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 9942978688
தொலைபேசி: 04612269306
நாட்டுக் கோழி வளர்ப்பு!
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 27ம் தேதி 'நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு,
தொலைபேசி: 04285241626.
கால்நடைகளில் நோய்ப்பராமரிப்பு..!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 26ம் தேதி 'கால்நடைகளில் நோய்ப்பராமரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04522483903
கட்டண பயிற்சி
கலந்துரையாடல்!
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை அபிவிருத்தித் திட்டத்தில், ஆகஸ்ட் 26 முதல் 28ம் தேதி வரை 'உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துரையாடல் பயிற்சி’ நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை கண்காட்சியில் வைத்துக் கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். தங்குமிடம் இலவசம். முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு,
தொலைபேசி: 04652246296.
அறிவிப்பு
தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 04466802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த
3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.