வாட்ஸ்அப் பராக்... பராக்!
விரல் நுனியில் உலகம் சுருங்கி விட்டது. ‘ஸ்மார்ட் போன்’ எனும் அற்புதம் மூலமாக நல்ல பல

விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் இருந்த பல விஷயங்கள், தற்போது வெளிச்சத்துக்கு வந்து பலரையும் விழிப்படையச் செய்து கொண்டிருக்கின்றன, பலருக்கு பலன்களையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஏன், அநியாயக்காரர்களை அலறவும் வைத்துள்ளன.
இதையெல்லாம் ‘ஸ்மார்ட் போன்’ மூலமாக சாத்தியமாக்கியிருக்கிறது ‘வாட்ஸ்அப்’!
இதே ஆயுதத்தை நீங்களும் கையில் ஏந்தி, விவசாயத்தில் நடக்கும் புதுமைகள், சாகுபடி நுட்பங்கள், நல்ல விளைச்சல் பெற்ற விவரங்கள், தடங்கலாக நிற்கும் பிரச்னைகள் மற்றும் பூச்சி-நோய்த் தாக்குதல்கள், அவற்றுக்கு எதிராக நீங்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்திய தொழில்நுட்பம் என்று அனைத்தையும் போட்டோ, செய்தி, வீடியோ என்று உடனுக்குடன் வாட்ஸ்அப் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். பசுமை விகடனுடன், பகிர்ந்து கொள்ள விரும்பும் பிற விஷயங்களையும் தாராளமாகப் பகிரலாம்.
உங்களின் வாட்ஸ்அப் தகவல்கள் 99400-22128 என்ற எண்ணுக்கு வந்து சேரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் உங்களின் வாட்ஸ்அப் தகவல்கள், விகடன் இணையதளம், ஃபேஸ்புக் மற்றும் பசுமை விகடன் இதழிலிலும் வெளியாகும். சிறந்த, பயனுள்ள பதிவுகளுக்குத் தக்க பரிசு உண்டு!
உங்களிடமிருந்து ஏரளமான தகவல்கள் வந்து குவிகின்றன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகள் இங்கே இடம் பெறுகின்றன.


வாசகர்கள்