நாட்டு நடப்பு
Published:Updated:

‘‘பாரம்பர்ய மாடுகள் பாதுகாக்கப்படும்!’’

‘‘பாரம்பர்ய மாடுகள் பாதுகாக்கப்படும்!’’

திருச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிறுவன நாள் விழா மற்றும் கால்நடை, கோழிப் பண்ணையாளர்கள் தினவிழா செப்டம்பர் 19-20 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர்.  தலைமையுரையாற்றிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திலகர், “பாரம்பர்ய இன மாடுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், பர்கூரில் 6 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பாரம்பர்ய இன மாடுகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. செம்மறி ஆடுகளுக்கு ஏற்படக்கூடிய  நீலநாக்கு நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ராஜபாளையம் நாய்களை அழிவிருந்து காப்பதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.   

‘‘பாரம்பர்ய மாடுகள் பாதுகாக்கப்படும்!’’

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசும்போது, “நடப்பு நிதியாண்டில் கால்நடைத்துறைக்கு 1,649 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஏழை எளியோரின் வருமானத்தை உயர்த்தக்கூடிய மிக முக்கியமான தொழிலாக கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு விளங்கி வருகிறது’’ என்றார். கால்நடைகள் குறித்து, பல விதமான தலைப்புகளில் கருத்தரங்கும், கண்காட்சியில் மேச்சேரி செம்மறி ஆடு, சேலம் கறுப்பு வெள்ளாடு, பெரிய வெள்ளை யார்க்ஷர் வெண்பன்றி... போன்றவை யும் இடம் பெற்றிருந்தன.

கு.ராமகிருஷ்ணன்

படம்: என்.ஜி.மணிகண்டன்