மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

புறா பாண்டி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

‘‘நாகர்கோவில் சென்றபோது, புளிச்சக்காய் மரத்தைப் பார்த்தேன். புளிச்சைக்காய் மரமும், ஸ்டார்

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

ஃப்ரூட் மரமும் ஒன்றா? இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

பா.ஸ்ரீனிவாசன், ஆத்தூர்.

மரம் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த ‘மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.

‘‘ஸ்டார் ஃப்ரூட் மரமும், புளிச்சக்காய் மரமும்  ஒன்றல்ல. இரண்டும் வேறு

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

வகையானவை. கேரளாவிலும், கேரள மாநில எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் வீடுகள்தோறும் இந்தப் புளிச்சக்காய் (Bilimbi tree) மரங்கள் வளர்க்கப்படுகின்றன. கேரளாவிலிருந்து உறவினர்கள் மூலம் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதிக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த மரங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் புளிச்சக்காய் மரங்கள் பரவலாக வளர்க்கப்படுகின்றன. பார்வைக்கு அருநெல்லிக்காய் மரம் போல இருக்கும். இதை ‘புளி மாங்காய்’ என்றும் சொல்வார்கள். புளிக்குழம்புக்குச் சுவை கூட்ட இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய் போடவும் உபயோகிக்கிறார்கள். காய்கறி சாலட்டில் இந்த புளிச்சக்காயைக் கலந்து சாப்பிடுகிறார்கள். கேரளாவில் புளிக்கு மாற்றாகவும் பயன்படுத்துகிறார்கள்.

ரத்த சோகையைப் போக்கவும், மூல நோயை விரட்டவும் மருந்தாக இது பயன்படுகிறது. வைட்டமின்-சி, வைட்டமின்-பி... போன்றவை ஏராளமாக இதில் உள்ளன. வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க, ஏற்ற மரப்பயிர் இது. களிமண் தவிர, அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும். தனிப்பயிராக இதைச் சாகுபடி செய்வதில்லை. வீட்டுத் தோட்டங்களில் வளர்த்துத்தான் காய்களை விற்கிறார்கள். ஒரு கிலோ காய் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மூன்று வயதான மரத்தில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 கிலோ வரை காய்கள் கிடைக்கும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தனியார் நர்சரிகளில் ஒரு கன்று
25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’

தொடர்புக்கு, அலைபேசி: 93661-09510

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

‘‘திசு வாழை சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதன் பயன்கள் மற்றும் அரசு மானியம் உண்டா என்பதைச் சொல்லுங்கள்?’’

எம்.எஸ்.தேவி, பல்லடம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.

‘திசு’ வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் வாழைக்கன்றுகள் மூலம் நல்ல விளைச்சல் கிடைத்து

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

வருகிறது. தமிழக சூழ்நிலைக்கு கிராண்ட்-9 என்ற திசு வளர்ப்பு வாழை ரகம் ஏற்றதாக உள்ளது. ஒரு ஏக்கரில் அதிகபட்சமாக 47 டன் வரை மகசூல் எடுக்க முடியும். அனுபவம் வாய்ந்த விவசாயிகள் இந்த அளவுக்கு மகசூல் எடுத்தும் வருகிறார்கள். திசு வாழை என்றவுடன் கண்ணை மூடிக் கொண்டு கன்றுகளை வாங்கிவிடக் கூடாது. குறைந்தபட்சம் ஐந்து இலைகளுடன், 40 செ.மீ உயரம் கொண்ட கன்றுகள்தான், நல்ல மகசூல் கொடுக்கும். 7 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 1,200 கன்றுகளை நடவு செய்யலாம். தரமான கன்றுகளைத் தேர்வு செய்ய, நீங்களே திசு வாழைக் கன்றுகள் உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று வாங்கி வருவது நல்லது. பழங்கள் அதிகநாட்கள் கெடாமல் இருக்கும். சீரான முதிர்ச்சி, ஒரே சமயத்தில் அறுவடைக்கு வாய்ப்புகள் உள்ளன.

இந்த ரக வாழை, வலுவான தண்டுப் பகுதியைக் கொண்டுள்ளதால், காற்று வீசினால் முறிந்து விழாது. வாழை சாகுபடியில் பருவம் முக்கியமானது. ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாசத்துக்குள் நடவு செய்துவிட வேண்டும். பொதுவாக, ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், சாதரணவாழை மற்றும் திசு வாழைக்கன்றுகள் நடுவது தவறு. இந்த சமயத்தில் நோய்த் தாக்குதலுக்கு இலக்காகி கன்றுகள் வளர்ச்சி குன்றும். திசு வாழை மரங்கள் காற்றுக்கு அசையாது என்றாலும், பாதுகாப்பு கருதி, வாழைத் தோட்டத்தைச் சுற்றி சவுக்கு... போன்ற நல்ல காற்றுத் தடுப்பு மரங்களைத் தேர்வு செய்து நடலாம். தென்னங்கீற்று மூலம் படல் அல்லது கீற்றுகள் நட்டும் காற்றை திசை திருப்பலாம்.

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

திசு வாழை முதல் முறை 11 மாதத்தில் விளைச்சல் தரும். மறுதாம்பு வாழையை சராசரியாக 10 மாதத்தில் அறுவடை செய்யலாம். குறைந்தபட்சம் மூன்று முறை மறுதாம்பு விடலாம். முற்றிலும் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தியும் சாகுபடி செய்ய முடியும். திசு வாழையில் ஏக்கருக்கு பல லட்சம் வருமானம் எடுக்கும் விவசாயிகள் உள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு `37,500/- மானியமாக வழங்கப்படுகிறது.’’

தொடர்புக்கு, செல்போன்:  98420-07125.

‘‘சீமைக் கருவேல மரத்தைக் கட்டுப்படுத்த மருந்து உள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதுகுறித்து விவரங்கள் தேவை?’’

ஏ.கே.ராமசாமி, சிவகங்கை.

மதுரையில் செயல்பட்டு வரும், சத்யகிரஹா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரமணன் பதில் சொல்கிறார்.

‘‘சீமைக் கருவேல மரமானது... வேலிக்காத்தான், வேலிக்கருவை... என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை. வெளி்நாடுகளில் மட்டுமே இதற்கான ஆய்வகம் உள்ளன. வெளிநாட்டில் சீமைக்கருவேல மரத்தின் வளர்ச்சி கட்டுப்படுத்தும் மருந்து உள்ளதாக கேள்விப்பட்டோம். எங்கள் அமைப்பும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது. இயந்திரங்கள் கொண்டு தோண்டி எடுக்க செலவு கூடுதலானது. இதனால், வெளிநாட்டிலிருந்து அந்த மருந்தை வரவழைத்து, இங்கு சோதித்துப் பார்த்தோம். இந்த மருந்தை தரையில் இருந்து, ஒரு அடி உயரம்விட்டு, பெயிண்ட் அடிப்பது போல அடித்துவிட்டால் போதும்... சீமைக் கருவேல மரம் 7 நாட்களில் கருகி விடுகிறது. தரையில் இருந்து ஓரடி உயரம் விட்டு, மீதியுள்ளவற்றை விறகுக்கு வெட்டிப்  பயன்படுத்தலாம்.

நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’

இந்த மருந்தைப் பயன்படுத்தினால், அந்த மரம் மீண்டும் துளிர்த்து வளர வாய்ப்புகள் இல்லை. முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, இந்த மருந்து சீமைக்கருவேல மரத்தை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறது. மற்ற மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, இந்த மருந்து பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியவாதிகளால், தொடங்கப்பட்ட, எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் லாபம் நோக்கம் இல்லாமல், இந்த மருந்தை விற்பனை செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு தேவையான மருந்தின் விலை `4 ஆயிரம் ஆகும்.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.