மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

புறா பாண்டி, படம்: தி.விஜய்பொங்கல் சிறப்பிதழ்

‘மாட்டுச் சிறுநீரை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். எளிதாக சேகரிக்கும் முறையைச்

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

சொல்லுங்கள்?’’

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாய பயிற்சியாளர் ராமண்ணா பதில் சொல்கிறார்.

‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. ‘பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாகப் பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாகப் பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது’ என்று ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வார்.

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச்  சேகரிப்பதும் ஒருவிதமான நுட்பம் என்றுதான் சொல்லவேண்டும்.  ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம். சிறுநீரைச் சேகரிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.

வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் கூடுதலாக சிறுநீர் கொடுத்து வருகின்றன.’’

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

‘‘மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் சீக்கிரமே களைத்துவிடுகின்றன. என்ன காரணம்? இதைத் தவிர்க்க வழி சொல்லுங்கள்?’’

எம்.பசுபதி, திருவண்ணாமலை.

முன்னோடி பால்பண்ணை விவசாயி கணேசன் பதில் சொல்கிறார்.

“அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூழ்நிலைகள் போன்றவற்றினால்,

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

கால்நடைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதிகமான மூச்சிரைப்பு ஏற்படும். தீவனம் உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். இதனால் பால் உற்பத்தியும் குறையும். அனைத்து உடல் உறுப்புகளும் சோர்வடைந்து கன்று ஈனும் திறனிலும் பாதிப்பு ஏற்படலாம். கால்நடைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அவை வாய்மூலமாகவும், சுவாசிப்பதன் மூலமாகவும் காதை அசைப்பதன் மூலமாகவும்தான் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். உச்சிவெயில் அடிக்கும் மதிய நேரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்கலாம். மேலும், மாடுகளுக்கு நல்லவிதமாக கீற்றுக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும். கொட்டகையின் அமைப்பு, தெற்கு-வடக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான், காலை மற்றும் மாலைவேளைகளில் வெயில் கொட்டகைக்குள் வராது.

மதிய வேளைகளில் மாடுகளைக் குளிப்பாட்டலாம். மாடுகளுக்கு எந்நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையின் சுற்றுப்புறத்தைக் குளுமையாக வைக்க, சுற்றிலும் மரங்களை வளர்க்கலாம். இதனால், குளுமையான காற்று பண்ணைக்குள் வீசும். வேம்பு, சூபாபுல், கிளரிசீடியா, அகத்தி, முருங்கை, வாகை, தென்னை, எலுமிச்சை ஆகிய மரங்களை வளர்க்கலாம். கோடை காலத்தில் அதிகமாக பசுந்தீவனம் கிடைக்காது. அந்தச் சமயத்தில் இந்த மரங்களின் இலைகளைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.”

‘‘மண்ணைக் கொண்டு பண்ணை வீடு கட்ட விரும்புகிறோம். கான்கிரீட் கட்டடத்தைப் போல நீண்ட காலம் தாக்குப்பிடிக்குமா...?’’


எஸ்.தனசேகர், பண்ணைப்பட்டி.

ஓசூரில் செயல்பட்டு வரும் மரபுசார் வீடுகள் கட்டுமான மையத்தைச் சேர்ந்த பொறியாளர் க.

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

இளஞ்சேரன் பதில் சொல்கிறார்.

‘‘மண்சுவர்கள் கான்கிரீட்  கட்டடத்தைவிட வலிமையானவை. சரியான மண்ணைத் தேர்வு செய்து சரியாகப் பதபடுத்தி வீடு  கட்டவேண்டும்.

மண்ணைச் சரியாகப் பதபடுத்தி இறுக்குதல் மண் வீட்டின் காலத்தை நீட்டிக்கும்.  மரபுவழியில் மண் வீடு  கட்டுவதற்கு பல முறைகள் உள்ளன .மண்ணின் தன்மைக்கு ஏற்ப கடுக்காய், வெல்லம், நெல் உமி, கற்றாழை, வைக்கோல் போன்ற மண்ணை இறுக்கும் தன்மை உள்ள பொருட்களைக் கொண்டு  மண்ணை மிக நன்றாகப் பிசைந்து, மிதித்து, கால்நடைகளைக் கொண்டு மிதித்து  இறுகிய அந்த மண்ணைக் கொண்டு வீடு கட்டவேண்டும். மண் இறுக்கமாகப் பயன்படும் பொருட்களும், முறையும் ஊருக்கு, நிலப்பரப்புக்கு ஏற்ப மாறுபடும். இறுக்கிய மண் சுவர் பாறை போன்று இறுகி காணப்படும். மேலும், ஆண்டுகள் செல்ல செல்ல வெயில், குளிரின் தாக்கத்தினால் முழுமையாக பாறையின் தன்மையை அடையும். ஆகவேதான்  இன்று பழைய மண் வீடுகளை ஜே.சி.பி இயந்திரம்’ கொண்டுதான் இடிக்க முடிகிறது.

இறுக்கமான தன்மை இருந்தாலும், மண் சுவர்கள், மனிதனைப் போல சுவாசிக்கும். இதனால்தான், கோடை வெப்பம் வீட்டுக்குள் வராது. அதிக குளிரும் தாக்காது. ஆனால், கான்கிரீட் கட்டிடம், மண் வீடு போன்று தன்மாற்றம் அடையாது. இதனால், ஏ.சி, மின்விசிறிச் செலவுகளும் அதிகரிக்கும்.

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?

மண் வீடு கட்டும் போது, முறையாக சாய்வுக் கூரையும், மண் சுவற்றை சுற்றி சாய்வுதளம், திண்ணை அமைத்து ‘மண் வீடுகளின்’ வாழ்நாட்களை நீட்டிக்கலாம். மழைக்காலத்தில் நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி நிற்காமல்  இருக்கும் இடமாக வீட்டைக்கட்ட தேர்ந்து எடுக்க வேண்டும். ஓடும் மழைநீரை வீட்டுக்குத் தொலைவில் (சுமார் பத்து அடி) செல்லும்படி வழி அமைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால், கீழ்ச்சுவற்றில் ஈரம் தாக்காமல் இருக்கும்.  இப்படித்தான்  நம் முன்னோர்கள் மரபு அறிவில், மரபுசார் பொருட்களைக் கொண்டு பல தலைமுறைகள் வாழ்ந்துள்ளனர். இன்றும் கூட தமிழக கிராமங்களில் 200 ஆண்டுகள் ஆன மண் வீடுகளைப் பார்க்க முடியும். மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம், ஓசூர் அருகில் உள்ள தொராப்பள்ளியில் 137 ஆண்டுகள் ஆன போதும், வலுவுடன் உள்ளது.

அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களைப் பிரதானமாகக் கொண்டுதான் மண் வீடுகள் அமைக்க வேண்டும். மண்ணை அடிப்படையாகக் கொண்டு மரபு சார் வீடுகள் கட்ட 100 சதுர அடிக்கு  உத்தேசமாக `75 ஆயிரம் முதல் ரூ 1 லட்சம் வரை செலவாகும்.’’

தொடர்புக்கு,
செல்போன்: 96551-49888.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.