மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!

மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

‘‘உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு’’


உழுது உண்டு வாழும் விவசாயிங்களோட வேலைதான், உன்னதமானது. இதுல கிடைக்கிற மகிழ்ச்சியும், மன நிறைவும், வேற எதுலயும் கிடைக்காதுனு, அவ்வையார் ஆயா, அழகா பாடி வெச்சிருக்காங்க. உழுதுண்டு வாழும் விவசாயிகள்னா, வெண்டைக்காய், கத்திரிக்காய் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கிறவங்கனு அர்த்தம் கிடையாது. வாழ்க்கையை முழுமையா, நிறைவா, மத்தவங்களுக்கு உதவியா, வழிகாட்டியா வாழறவங்க. இப்படி உழுதுண்டு வாழ்ந்தவங்க, சமுதாயத்துல எல்லா நிலையிலயும் இருந்தாங்க. மண்ணை ஆண்ட மன்னனிலிருந்து அமைச்சர், ஆசிரியர், வணிகர்கள், இயற்கையுடன் அறிவியலைக் கண்டறிஞ்சு வாழ்ந்த விஞ்ஞானிகளான சித்தர்களும் கூட உழுதுண்டு வாழ்ந்தவங்கதான். சுருக்கமா சொல்லணும்னா இவங்கள்ல்லாம், ‘வீக் எண்ட் விவசாயிகள்’னும் கூட சொல்லலாம்.

இப்படி மக்களோட, மக்களா  வாழ்ந்த சித்தர்கள் உணவு, மருத்துவம், விவசாயம் ... சம்பந்தமா ஏராளமான விஷயங்களைச் சொல்லி வெச்சிருக்காங்க.

நம்ம காலத்துல வாழை இலையில சாப்பிடறதே அரிதா இருக்கு. ஆனா, அந்தக் காலத்துல பலவிதமான இலையிலயும், விதவிதமான பாத்திரத்துலயும் சாப்பிட்டிருக்காங்க. சமைக்கிற சாப்பாடு சத்தா இருந்தா பத்தாது, அதை எதுல வெச்சு, எந்தப் பாத்திரத்துல வெச்சு சாப்பிடறோம்ங்கிறது முக்கியம்னு பட்டியல் போட்டு சொல்லியிருக்காங்க. அப்படி பல சித்தருங்க சொல்லி வெச்ச, சத்தான தகவலை கொஞ்சம் ருசி பார்ப்போம்.

மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!

‘வாழைவெள்ளைப் பன்ன நன்றா மற்றிலைகண்மத்திபமா

மாழைவெள்ளிவெண்கலமு மாநன்றாங் – கோழை

கயப்பாண்ட நோய்போங் கருதினிவைக் கெல்லாங்

குயப்பாண்ட மேலசனங் கொள்’னு


சித்தர் பாடல் சொல்லுது. அதாவது, உணவு சாப்பிட பயன்படுத்துற இலை வகையிலயே, வாழைக்கு, முதல் இடமும், மத்த இலைங்களுக்கு அடுத்தடுத்த இடமும்  கொடுத்திருக்காங்க..

பொன், வெள்ளி, வெண்கலப் பாத்திரம் நல்லது. இந்த மூணையும் விட, மண் பாத்திரத்துக்கு கோழை, கயம் (ரத்தசோகை), பாண்டு (காசநோய்) நோயைப் போக்கும்தன்மையும் உண்டாம்.

‘தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமண்ணு?

மக்கினி மந்த மபலமொடு திக்கிடுகால்

பாழை யிலைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனா

வாழை யிலைக்குணரு வாய்’


ஆடிக்கொரு தரம் அமாவசைக்கொரு தரம் வாழை இலையில சாப்பிடாம, தினமும் சாப்பிட்டா அக்கினி மந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்தம் போக்குமாம் உடல் வலிவும் பொலிவும் பெறுமாம்.

‘‘பலாவிலையி லுண்ணப் பதுங்கிநின்ற பித்தங்

குலாவ யெழும்பிக் குதிக்கும்-உலாவிவரு

கன்ம மகோதரநோய் காணா தகலாத

குன்ம மகலுங் குறி’’


அதாகப்பட்டது, பலா மரத்து இலையில சாப்பிட்டா பெருவயிறு, குன்மநோய் (குடல் நோய்) நீங்கும்னு தேரையர் சித்தர் பாடி வெச்சிருக்காரு.

 குளங்கள் நிறைய இருக்கிற ஊர் பகுதியில தாமரை பரவி கிடக்கும். அவசரத்துக்கு, தாமரை இலையில் பறிச்சு சாப்பிடற பழக்கம் பரவலா, இருக்கு. சில இட்லி கடையில தாமரை இலையிலதான் பரிமாறுவாங்க. ஆனா, இப்படிச் செய்யக்கூடாதாம்.

‘‘தாமரைப்பன் னத்திலுண்டால் தாங்கரிய உட்டினமாம்

நாவவா தஞ்சினந்து நண்ணுங்காண் – தூமமுறா

அக்கினிமந் தங்கனுண்டாம் அன்றே மலர்த்திருவத்

திக்கினிலி ராளெனவே வேர்’’


உடம்புல சூட்டை உண்டாக்கி, மந்தத் தன்மையை உருவாக்கும் தன்மை, தாமரை இலைக்கு உண்டுனு சொல்றாங்க.

சாப்பிடற பாத்திரம் எவ்வளவு முக்கியம்ங்கிறத பத்தியும் வரலாற்றுல பல தகவல் கொட்டிக் கிடக்குது.

கிரேக்க நாட்டு அரசன் அலெக்சாண்டர் இந்தியா மேல படையெடுத்து வந்த சமயத்துல நடந்த சம்பவம் இது.

பனை மரம் மாதிரி, வளர்ந்து நின்ன கிரேக்க படை வீரனுங்க, திடீர்னு வயித்தைப் பிடிச்சுக்கிட்டு சுருண்டு, சுருண்டு விழுந்திருக்காங்க. என்ன காரணம்னு, ஆராய்ஞ்சிப் பார்த்தா, கிரேக்க நாட்டுல இருந்து, இந்தியா வரும் வரையிலும்  வெள்ளீய (lead-Pb) பாத்திரங்களையே சாப்பிடவும், தண்ணி குடிக்கவும் பயன்படுத்தியிருக்காங்க. இதனால, குடல் பகுதி பாதிச்சு. தீராத வயித்து வலி உருவாகியிருக்கு. ஆனா, அலெக்சாண்டாருக்கும், தளபதிகளுக்கும் உடம்பு ஆரோக்கியமா இருந்திருக்கு. காரணம், இந்த அதிகாரிங்க அத்தனைப் பேரும் வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்காங்க. இதனால, பாதிப்பு இல்லாமா இருந்திருக்காங்க.