மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி?

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி?

புறா பாண்டி

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் என்ன வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன?’’

கே.எம்.பழனிமுத்து, கள்ளக்குறிச்சி.

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?



கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்குநர் முனைவர்.பெ.சாந்தி பதில் சொல்கிறார்.

‘‘இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலேயே முதன் முறையாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்தான் 2005-ம் ஆண்டில் தொலைதூரக் கல்வியை அறிமுகப்படுத்தியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழியாக முதுநிலைப் பட்டப் படிப்புகளான ‘வணிகமேலாண்மை’, ‘சுற்றுச்சூழல் மேலாண்மை’, ‘கரும்பு உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள்’, முதுநிலைப்பட்டயப் படிப்புகளான ‘உணவு நுட்பவியல்’, ‘மூலிகைப் பயிர் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாடு’, ‘உயிர்த் தகவல் இயல்’ ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து பணியில் உள்ளவர்களும், முதுநிலைப் பட்டப்படிப்பைத் தொடர இயலாதவர்களும், படிப்பதற்கு ஏற்ற வகையில் இப்பாடங்கள் உள்ளன.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்ட சான்றிதழ் பாடங்கள் 16 தலைப்புகளில் நடத்தப்படுகின்றன. இச்சான்றிதழ் பாடங்கள் அனைத்தும் தொழில் தொடங்குவதற்கான தொழில்நுட்பங்களையும், உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வேளாண்மையில் ஈடுபட்டு அதிகம் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளன.

இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு (B.F.Tech) உலக அளவிலேயே முதல்முறையாக

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?

விவசாயிகளுக்கென்றே வழங்கப்படும் ஒரு முன்னோடித் திட்டமாகும். தாம் ஈடுபடும் விவசாயத் தொழிலில், தான் ஒரு பட்டதாரியாக விளங்கிடவும், அனைத்து வேளாண் தொழில் நுட்பங்களையும் தெரிந்துகொண்டு சிறந்த தன்னம்பிக்கையைப் பெறும் வண்ணமும், தாமும் ஒரு பட்டதாரி என்ற சமூக அங்கீகாரத்தை விவசாயிகள் பெற்றிடும் வண்ணமும் இத்தொழில்நுட்பப் பட்டப்படிப்பு உள்ளது. 10-ம் வகுப்பு வரை படித்த 27 வயது நிரம்பிய விவசாய பெருமக்களுக்கு இந்தப் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது.’’

தொடர்புக்கு, இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம்,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்புத்தூர் - 641003 தொலைபேசி எண்கள்: 0422-6611229, 94421-11057.

‘‘இயற்கை முறையில் மா சாகுபடி செய்து வருகிறோம். ஆறு ஆண்டுகள் வயது கொண்ட மா மரங்களில், பூக்கள் கொட்டிவிடுகின்றன. மரத்துக்கு இரண்டு, மூன்று காய்கள் மட்டுமே உள்ளன. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லுங்கள்?’’

டி.யசோதா, காஞ்சிபுரம்.

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?



திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மா விவசாயி பாரதி பதில் சொல்கிறார்.

‘‘மா மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதும், பூச்சி மற்றும் உரமேலாண்மையும்தான் விளைச்சலுக்கு அடிப்படையாக உள்ளன. டிசம்பர் மாதம் வாக்கில் மா மரம் நிறைய பூக்கள் இருக்கும். இந்த சமயத்தில் தவறியும் கூட, பாசனம் செய்துவிடக்கூடாது. தண்ணீர் பாசனம் செய்தால், மரத்தில் உள்ள பூக்கள் அத்தனையும் கொட்டிவிடும். சில சமயம் டிசம்பர் மாதங்களில் மழை பெய்துவிடும். அந்த ஆண்டு கவனித்துப் பார்த்தால், மா விளைச்சல் குறைந்திருக்கும். பிப்ரவரி மாத கடைசியில் பூக்கள் கோலிகுண்டு அளவு காயாக மாறும். இதன் பிறகு மா மரங்களுக்கு நன்றாக நீர்ப் பாசனம் செய்யலாம். இதைத்தான், ‘தைப்பூ தரையில், மாசிப்பூ மரத்தில்’ என்று சொல்லி வைத்தார்கள்.

மா மரத்துக்கு இயற்கை உரங்களை, ஆகஸ்ட் மாதம் வாக்கில் கொடுத்தால்தான், அதன் பலனை முழுமையாக அறுவடை செய்ய முடியும். மரத்துக்கு  50 கிலோ என்ற அளவில் மட்கிய தொழுவுரத்தைக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?

இயற்கை முறையில் சாகுபடி செய்தால், பூச்சி-நோய் தாக்குதல் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில், மா இலைகளிலும், பூக்களிலும் கருப்பு மை பூசியது போல இருக்கும். இது பூஞ்சணத்தால் உருவாகும் நோய். இதைக் கட்டுப்படுத்த எளிய வழி உள்ளது. ஒரு கிலோ மைதா மாவை, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, பசைப் போல காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 25 லிட்டர் தண்ணீர் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவும். இளம் மரங்கள் என்றால், ஒரு ஏக்கருக்கு இந்த அளவு போதுமானது. இப்படி தெளிப்பதால், பூஞ்சணம், மைதா பசையில் ஒட்டிக் கொள்ளும். சூரிய ஒளி பட்டவுடன், மைதா பசையுடன் பூஞ்சணமும் காய்ந்து, உதிர்ந்துவிடும். இந்த பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், அடுத்த ஆண்டு ஒரு மரத்தில் 100 கிலோ வரை மாம்பழங்களை நீங்கள் அறுவடை செய்ய முடியும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 93805-33376.

‘‘எங்கள் கிணற்றில் நீர்ப் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, ஆழ்துளைக் கிணறு எடுக்க விரும்புகிறோம். நீர் வளத்தை அறிந்து கொள்வது எப்படி? புதுமையான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறதா?’’

-கே.சிவானந்தம், விழுப்புரம்.

சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையத்தின் தொழில்நுட்ப அலுவலர் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?

‘‘பூமியில் உள்ள நீர்வளத்தை அறியும் கருவி எங்கள் துறையில் உள்ளது. ஆனால், அக்கருவி மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உத்தேசமாகத்தான் கண்டறிய முடியும். 100% துல்லியமாகச் சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீர்வளத்தை அறியும் கருவியைப் பயன்படுத்த சில விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். உங்கள் பகுதி நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஆற்றுக்கும், நீர்வளம் பார்க்கும் பகுதிக்கும் 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்; 200 மீட்டர் தொலைவுக்குள் கிணறுகள் இருக்கக் கூடாது. இத்தகைய விதிமுறைகள் பொருந்தினால் மட்டுமே உங்கள் பகுதியில் உள்ள எங்கள் அலுவலர்கள், தோட்டத்துக்கு வந்து நிலத்தடி நீர்மட்டத்தைக் கண்டறிந்து சொல்வார்கள். இதற்கு கட்டணம் உண்டு.

செயற்கைக்கோள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தைப் பார்க்கும் முறை, ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிலத்தடி நீர்வளம் குறைவாகவே உள்ளது.

நமக்கு கிடைக்கும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல், சேகரித்துப் பயன்படுத்தினால் மட்டுமே, நீர்ப்பற்றாக்குறை இல்லாமல், விவசாயம் செய்ய முடியும். பண்ணைக் குட்டைகள் வெட்டி, மழைநீரை சேகரித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீர் கிடைக்காத ஆழ்துளைக் கிணறுகளில் கூட, பண்ணைக்குட்டை வெட்டுவதாலும், மழைநீரை முறையாக சேமிப்பதாலும் மீண்டும் நீர் சுரக்க வாய்ப்புகள் உள்ளன.’’

நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல  விளைச்சல் பெறுவது எப்படி?