மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?

புறா பாண்டி, ரமேஷ் கந்தசாமி

“தேனீ வளர்ப்புக்கு தோட்டக்கலைத் துறையின்  உதவி கிடைக்குமா? ஏக்கருக்கு எத்தனை பெட்டிகள்

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?

தேவைப்படும்?’’

-எம்.குமரன், தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர்.பி.இளங்கோவன் பதில் சொல்கிறார்.

‘‘தேனீக்கள் வளர்க்கும்போது 20% கூடுதல் மகசூல் கிடைக்கிறது. பயிர்களில், விளைச்சலைப் பெருக்குவதில் தேனீக்களின் பங்கு அதிகமானது. ஆகையால்தான், தேனீ வளர்க்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்கி வருகிறது.

‘தேனீக்கள் காலனி’ ஒன்றுடன் ஒரு பெட்டியை 50% மானிய விலையில் கொடுத்து வருகிறோம். விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று எங்கள் அலுவலர்கள் பெட்டிகளைப் பொருத்தித் தருகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் 20 பெட்டிகள் வரை வைக்கலாம். நிலத்தில் எந்த வகையான பயிர் இருந்தாலும், தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். குறிப்பாக, இந்தப் பயிர்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை உங்கள் தோட்டத்தில் உள்ள பயிர்களில் தேன் இல்லாவிட்டாலும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தேனீக்கள் பறந்து சென்று, தேனைச் சேகரிக்கும்.

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?

ஒரு பெட்டியில் இருந்து, 45 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 500 மில்லி தேன் கிடைக்கும். பூக்கள் அதிகமாக பூக்கும் நேரத்தில், தேன் கூடுதலாகக் கிடைக்கும். எப்படி பார்த்தாலும், ஆண்டுக்கு 5 லிட்டர் வரை தேனைச் சேகரிக்கலாம். தற்சமயம் ஒரு லிட்டர், தேன் குறைந்தபட்சமாக 500 ரூபாய்க்கு விற்பனையானாலும், ஒரு பெட்டி மூலம் 2,500 ரூபாய் வருமானம் வரும்.

20 பெட்டிகள் மூலம் 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?

பெட்டியில், 10 லிட்டர் தேன் எடுக்கும் விவசாயிகள்கூட உள்ளனர். இந்த அளவுக்கு வருமானம் எடுக்க முறையான திட்டமிடலும், பயிற்சியும் தேவை.

எங்கள் துறை மூலம் தேனீ வளர்ப்புப் பற்றி பயிற்சியும் கொடுத்து வருகிறோம். மானிய விலையில் தேனீப் பெட்டிகள் வழங்கும் திட்டம், தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப் படுகிறது. இந்த ஆண்டுக்கான மானியத் தொகை அளவு மட்டும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில், அரசு தரப்பில் இருந்து உத்தரவு வந்துவிடும். தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98420-07125.

‘‘நபார்டு வங்கி சோலார் பம்ப்செட் அமைக்க, மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டோம். அதைப் பெறுவது எப்படி?’’

திருப்பூர்.

சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.கண்ணன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?



‘‘சோலார் பம்ப்செட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சோலார் பம்ப்செட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தமிழ்நாட்டுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நபார்டு மானியம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகள், மாநில, மாவட்டக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளிலிருந்து கடன் பெற்று சோலார் பம்ப்செட் அமைத்திருந்தால், நபார்டு மூலம் மானியம் கிடைக்கும். இந்த மானியம் மத்திய அரசின் ‘புத்துப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்’ (The Ministry of New and Renewable Energy ) தேர்வுசெய்துள்ள பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். தகுதியுள்ள விவசாயிகள் சோலார் பம்ப்செட் அமைக்க, வங்கியில் கடனுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அலுவலர்கள் விவசாய நிலத்தை நேரடியாகப் பார்த்து ஆய்வு செய்த பிறகு கடன் வழங்குவார்கள். கடன் வழங்கிய பின் குறிப்பிட்ட வங்கி, நபார்டுக்கு மானிய விண்ணப்பத்தை அனுப்பும். பிறகு நபார்டு விண்ணப்பங்களின் தகுதிக்கேற்பவும், மத்திய அரசின் மானியத்தொகை கையிருப்புக்குத் தகுந்தவாறும், மானியத் தொகையை வங்கிக்கு அளிக்கும்.

இரண்டு குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்கு 54 ஆயிரம் ரூபாய் மானியம், அதிகபட்சம் 5 குதிரைத்திறன் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை, சம்பந்தப்பட்ட விவசாயி சோலார் பம்ப்செட் வாங்கிய நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?

விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் கடன்தொகை பெற்றால், மானியம் பெறும் நடைமுறைகளை வங்கிகளே செய்துவிடும். இதனால், மானியம் பெறுவதற்கு விவசாயிகள் சிரமப்படதேவையில்லை. மானியத்தொகை போக மீதியுள்ள கடன் தொகையை விவசாயிகள் திரும்பச் செலுத்த வேண்டும். அதிகபட்சம் 10 ஆண்டுக்குள் கடன் தொகையை செலுத்திவிட வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற விவசாயிகள் கடன் தொகையைச் செலுத்தாமல், காலம் தாழ்த்தினால் மானியம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் சோலார் பம்ப்செட்டுகள் அமைக்க முடியும்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 044-28304614

‘‘நெல், பயறு வகைகள் மற்றும் தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?’’

ஆர்.மீனா, சங்ககிரி.

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நீங்கள் கேட்டுள்ள நெல், பயறு வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், தீவனத் தட்டைப்பயறு... போன்றவை ஆராய்ச்சி நிலையங்களில் இருப்புக்குத் தக்கப்படி விவசாயிகளுக்கு விலைக்கு வழங்கி வருகிறார்கள். முன்பதிவு செய்து விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.’’

‘‘பொன்னீம் 300 மில்லி அல்ல...

30 மில்லி!’’


பசுமை விகடன் 25-05-2016 தேதி இதழில், நீங்கள் கேட்டவை பகுதியில் பொன்னீம் பூச்சிவிரட்டி தயாரிப்பு குறித்து, சென்னை லயோலா கல்லூரியில் செயல்பட்டு வரும், பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை முனைவர்.இன்னாசி முத்து பதில் சொல்லியிருந்தார்.

‘அதில், பத்து லிட்டர் நீருக்கு, 300 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்’ என இடம் பெற்றுவிட்டது. ஆனால், பத்து லிட்டர் நீருக்கு 30 மில்லி என்பதுதான் சரி. தவறுக்கு வருந்துகிறோம்.

நீங்கள் கேட்டவை:  தீவனச்சோள விதைகள்  எங்கு கிடைக்கும்?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.