மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!

மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
News
மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!

‘‘ஜுன் 5-ம் தேதி கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தோட முக்கிய கோஷம் ‘காட்டுயிர்களைக் கொல்லாதீங்க’ங்கிறதுதான். காட்டுக்குள்ள போகாதீங்க... காட்டுக்குள்ள போகாதீங்க...’’னு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் காடு, காட்டுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்புனு பேசிகிட்டு, காட்டுக்குள்ள ஒரு கூட்டம், கூட்டமா போறதும் நடக்குது. ‘கடவுளின்தேசம்’(god’s own state)னு சொல்லப்படற கேரளாவுல ‘எகோ-டூரிஸம்’(Eco-tourism)ங்கிற பேர்ல நடக்கிற கூத்து, காட்டையும், காட்டுல வாழ்ற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலா இருக்கு. கேரளாவுல பல பகுதியில ‘எகோ-டூரிஸம்’னு சொல்ற ‘காட்டு உலா’ ரொம்பவே பிரபலம். வனத்துறை சார்பிலேயே, இந்த உலாவுக்கு ஏற்பாடு செய்றாங்க. தமிழ்நாடு மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன..? கேரளாவுல சட்டப்படி நடந்தா, இங்க வேற மாதிரி நடக்குது.

இப்படி காட்டுக்குள்ள மனுஷங்க அடிக்கடி நுழையுறது அங்க வாழ்ற உயிர்களுக்கு ஆபத்தானதுனு வனவியல் விஞ்ஞானிங்க எச்சரிக்கை செய்றாங்க. ஏன்னா, மனுஷங்க விதவிதமான சோப்பு, ஷாம்பு, வாசனைத் திரவியங்களைப் போட்டுகிட்டு காட்டுக்குள்ள திரிஞ்சா, காட்டுயிர்களோட நுண்ணறியும் சக்திக்கு தொந்தரவா இருக்குமாம். நுண்ணறியும் திறன்ல குழப்பம் வந்தா, எதிரி விலங்குகள் நடமாட்டத்தை அறிய முடியாமல் போகுமாம். உதாரணத்துக்கு, மான்களுக்கு தன்னோட எதிரிகளான புலி, சிங்கம் இதுகளவிட ஆபத்தான மனுஷங்களோட வாசனை எல்லாம் தெரியும். அந்த வாசனையை வெச்சே, அந்த திசைப்பக்கம் போகாம திரும்பிடும். ஆனா, நவீன உலகத்து மனுஷன் கூட்டமா போகும் போது, காட்டுக்குள்ள வாழும் ஒவ்வோர் உயிருக்கும் ஆபத்து உருவாகுது. கூடவே இவங்க கொண்டு போற பிளாஸ்டிக் பேப்பர், பீர் பாட்டில் கண்ணாடிங்க... பெரிய, பெரிய யானைகளோட உயிர்களுக்கே கூட உலை வைக்கிறதும் உண்டு. இதனாலதான், காட்டுக்குள்ள மனுஷனை அனுப்பாதீங்கனு எதிர்ப்புக் குரல் ஒலிக்குது.

அப்படினா, காட்டுக்குள்ள வாழ்ற மலைவாழ் குடிமக்கள் மூலமா, காட்டுக்குள்ள இருக்கிற எந்த உயிர்களுக்கும் குந்தகம் ஏற்படாதானு கேட்கலாம். நிச்சயம் பாதிப்பு ஏற்படாது. ஏன்னா, காடுங்கதான் தங்களோட வாழ்வாதாரம்ங்கிறது அந்த மக்களுக்கு நல்லாவே தெரியும்.

மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைப்பகுதியில உள்ள மலைவாழ் மக்களுக்கு ‘காணி’ ங்கிற பேரு உண்டு. இந்த மலையில வாழுற மக்களுக்கு, எப்படி காணினு பேரு வந்திருக்கும்னு விசாரிச்சப்போ ஒரு கதை சொன்னாங்க. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா, ஆபத்து காலத்தில கன்னியாகுமரி காட்டுக்குள்ள தஞ்சம் புகுந்திருக்கார். அங்க வாழ்ந்த பழங்குடி மக்கள் மன்னரைப் பாதுகாத்து சேவகம் செய்திருக்காங்க. இதற்கு பிரதிபலனா மன்னர் மீண்டும் அரியணை ஏறியதும், அந்த மக்கள் வசித்து வந்த மலைப் பகுதியில் இருந்த இடங்களை, ‘கரம் ஒளிவு பண்டார வகை காணி சொத்து’ என்ற பெயரில், இவர்களுக்கு செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். ‘காணி’ என்றால் ‘நிலம்’ மன்னர் கொடுத்த காணிக்கு, அதாவது நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆனாதால, இந்த மக்களுக்கு காணினு பேரு வந்திருக்கு. திருவிதாங்கூர்  மன்னர் கொடுத்த நிலத்துல விவசாயம் செய்தாலும், காணி மக்களுக்கு இப்பவும் காடுதான் தெய்வம். காட்டுல விளைஞ்சு கிடக்கிற கிழங்கு, பழ வகைகள், காந்தாரி மிளகாயைச் சேகரிச்சு சாப்பிடறதை இன்னும் கூட சில பேரு பழக்கமா வெச்சிருக்காங்க. மலைவாழ்மக்களுக்கு காடுங்கதான் அட்சயபாத்திரம் அதை முறையா எப்படி பயன்படுத்திக்கிறதுங்கிற, அறிவும், தெளிவும் அந்த மக்கள்கிட்ட அதிகமாவே இருக்கு.

ஐரோப்பிய நாடுகளுக்கு மந்தாரை இலைகளை ஏற்றுமதி செய்றாங்க, ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க.

இந்த மந்தாரை இலைகளைத் தைச்சு, அதுல சாப்பாடு சாப்பிட்ட பழக்கத்தை நாம மறந்துட்டோம். ஆனா, ஐரோப்பிய ஹோட்டல்கள்ல மந்தாரை இலையை அழகான தட்டா செஞ்சு, விதவிதமா சாப்பிடுறாங்க. ‘இந்தத் தட்டில் மருத்துவ குணம் இருக்கு. இந்தத் தட்டு மட்கும் தன்மை (Bio-Degradable) கொண்டது’னு விளம்பரம் வேற செய்றாங்க. அப்படி என்ன இந்த மந்தாரைக்குள்ள இருக்குனு பார்த்த ‘மந்தாரை உள்ளவரை நொந்தாரைக் காண முடியாது’னு ஒரு சித்த மருத்துவப் பழமொழி சொல்லுது. ‘சீதபேதி மற்றும் மூலவியாதியைக் குணப்படுத்த இந்த இலை உதவும்’னு மந்தாரை புகழ்பாடுது சித்த மருத்துவம்.